படமாகிறது ஸ்ரீரெட்டியின் வாழக்கை வரலாறு.! இன்னும் எத்தன பேர் மாட்ட போறாங்களோ.!

By Rajkumar · 9/2/2019

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் தன்னை படுக்கைக்கு அழைத்த பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு வந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். அதில் இயக்குனர் ஏ ஆர்முருகதாஸ், லாரன்ஸ், ஸ்ரீகாந்த் போன்றவர்கள் பட வாய்ப்புகள் தருவதாக கூறி தன்னுடன் உடலுறவு மேற்கொண்டதாக குற்றம் சாட்டி இருந்தார். 

ஸ்ரீரெட்டி கூறுவது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், ஒரு சிலர் அவர் கூறுவதில் நியாயம் இருக்கிறது என்று நடிகை ஸ்ரீரெட்டிக்கு ஆதரவும் தெரிவித்து வந்தனர். தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ள நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது என்ற ஒரு தகவல் வெளியாகி இருந்தது. 

ஆனால், தனது வாழ்க்கை வரலாறு படமாவது குறித்து தனது தனது முகநூல் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து பதிவிட்டுள்ள நடிகை ஸ்ரீரெட்டி”ரெட்டி டைரி" திரைபடம் என்னுடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்படும் படமல்ல. அது வேறு ஒரு நடிகையின் வாழ்க்கை வரலாறு படம். அந்த படத்தில் நான் என்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் விரைவில் நடிப்பேன். அதற்காக நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன் ” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரெட்டி டைரி என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் ஸ்ரீரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரீரெட்டி வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தை டாக்டர் அலாவுதீன் இயக்குகிறார். சினிமா துறையில் ஒரு நடிகைக்கு ஏற்படும் பிரச்சனைகளும் அதனை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் கதை. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full