ஸ்ரீதேவிக்காக சிங்கப்பூர் ஹோட்டல் உரிமையாளர் என்ன செய்தார் தெரியுமா ! புகைப்படம் உள்ளே

By ·
கடந்த மாதம் துபாயில் காலமான பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மரணம் சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரபலங்கள் பலரும் ஸ்ரீதேவியின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்தனர்.நேற்று கூட சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் வீட்டில் அவரது 16 ஆம் நாள் துக்க அனுசரிப்பு கூட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்வுக்கு நடிகர்கள் ரஜினி,சூரியா, அஜித் அகியயோர் நேரில் சென்று ஸ்ரீதேவியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.இந்த நிலையில் ஸ்ரீதேவியின் ரசிகர் ஒருவர் சிங்கப்பூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் டெல்லி ரெஸ்டாரண்ட் என்ற உணவு விடுதியை வைத்துள்ளார். அங்கு அவர் ஸ்ரீதேவி உருவம் கொண்ட ஒரு பொம்மையை மாலை, புடவை மற்றும் நகைகளால் அலங்கரித்துள்ளனர். ஸ்ரீதேவி ரசிகர் செய்த இந்த பொம்மையின் புகைப்படம் தற்போது சமுகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை நெகிழவைத்துள்ளது.
Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை