எப்படி அரேஞ்ச் மேரேஜ் பண்ணீங்க? முதன் முதலாக மனம் திறந்த நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்

By subhashini · 1/3/2025

தன்னுடைய திருமணம் குறித்து முதன் முதலாக மனம் திறந்து நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் விஜயகுமார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது விஜயகுமார் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

இதனிடையே விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 1976 யில் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து இருந்தார். விஜயகுமாரின் முதல் மனைவியான முத்துக்கனுக்கு பிறந்தவர் தான் அருண் விஜய், அனிதா, கவிதா. மேலும், மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. இவருடைய மகன் அருண்குமார் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் மிரட்டிக் கொண்டு வருகிறார்.

ஸ்ரீதேவி குறித்த தகவல்:

அதுமட்டும் இல்லாமல் விஜயகுமாரின் மகள்களும் படங்களில் நடித்திருந்தார்கள். அந்த வகையில் விஜயகுமாரின் கடைசி மகள் ஸ்ரீதேவி விஜயகுமார் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இவர் தெலுங்கு மொழியில் தான் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் முதல் படத்திலே பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதற்குப்பின் இவர் தமிழில் காதல் வைரஸ் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

ஸ்ரீதேவி திரைப்பயணம்:

பின் இவர் தனுசுடன் காதல் கொண்டேன், ஜீவாவுடன் தித்திக்குதே போன்ற பல படங்களில் நடித்து வந்தார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
அதற்குப்பின் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரூபிகா என்ற மகளும் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு நடிகை ஸ்ரீதேவி சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

ஸ்ரீதேவி பேட்டி:

சமீப காலமாக இவர் அவ்வபோது சில படங்களில் மட்டும் தலை காமித்து வந்தார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் வெப் சீரியஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய திருமணம் குறித்து நடிகை ஸ்ரீதேவி கூறியிருப்பது, என்னுடையது முழுக்க முழுக்க அரேஞ்ச் மேனேஜ் தான். நிறைய பேர் என்னிடம், எப்படி டக்குனு நீங்கள் அரேஞ்ச் மேரேஜ்க்கு ஒத்துக் கொண்டீர்கள்? என்று கேட்டார்கள்.

திருமணம் குறித்து சொன்னது:

அதற்கு காரணம் என்னுடைய அப்பா அம்மா தான். என் அப்பா- அம்மா, ஒரு வயது வரைக்கும் நடி. அதற்குப்பின் கல்யாணம் தான் என்று தெளிவாக இருந்தார்கள். அப்பா எது சொன்னாலும் நான் மீற மாட்டேன். அதனால் நான் ஏற்கனவே அதற்கு தயாராக இருந்தேன். அப்பா- அம்மா சொன்னால் கண்டிப்பாக அது நல்லதுக்காக தான் இருக்கும். எனக்கு அதில் நிறைய நம்பிக்கை இருக்கு. கடவுள் புண்ணியத்தில் எனக்கு நல்லபடியாக வாழ்க்கையும் அமைந்தது என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full