பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணைந்த சர்ச்சை நடிகை.! டிஆர்பியை உயர்த்த போட்ட செம பிளான்.!

By Rajkumar · 30/5/2019

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவை பெற்று இருந்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் அடுத்த மாதம் ஜூன் 23ஆம் தேதி துவங்க இருக்கிறது என்று விஜய் தொலைக்காட்சி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக விஜய் டிவி பிரபலமும், ஓகே ஓகே பட நடிகையுமான ஜாங்கிரி மதுமிதா கலந்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி மட்டும் உறுதியானது. இவரை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக பல்வேறு பிரபலங்களின் பெயர்களை சமூகவலைதளத்தில் அடிபட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த போட்டியாளராக பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி கலந்து கொள்ளப் போவதாக சில நம்பகமான தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி சமீப காலமாக பல்வேறு நடிகர்களைப் பற்றிய சர்ச்சையான ரகசியங்களை வெளியிட்டு வந்தார். பொதுவாக மற்ற மொழி பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு செல்வதற்காக சில சர்ச்சையான போட்டியாளர்களை கலந்து கொள்ள செய்வது வழக்கம். இந்த நிலையில் ஸ்ரீ ரெட்டி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதால் ஸ்ரீ ரெட்டி பிக்பாஸ் குழுவினர் அனுப்பி உள்ளதாக சில செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே நடிகர் ஸ்ரீ ரெட்டி தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரபல தெலுங்கு நடிகர் நானி ஸ்ரீரடி கலந்து கொண்டால் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என்று கூறியதால் ஸ்ரீரெட்டி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full