விவகாரத்திற்கு காரணம் இது தான், முதல் கணவரை பற்றி மனம் திறந்த நாதஸ்வரம் சீரியல் நடிகை

By Rajkumar · 1/8/2024

விவாகரத்து குறித்த முதன் முதலாக மனம் திறந்து நடிகை சீரியல் நடிகை ஸ்ரீதிகா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ஸ்ரித்திகா. இவர் சன் டிவியில் 2010 ஆம் ஆண்டு திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பப்பட்ட “நாதஸ்வரம்” சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பெரிய அளவு பிரபலமாகி தனெக்கென ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்தார்.

இந்த சீரியலை தொடர்ந்து இவர் மாமியார் தேவை, வைதேகி, உறவுகள் சங்கமம், முகூர்த்தம், கலசம், கோகுலத்தில் சீதை, உயிர், கல்யான பரிசு, அழகு, மகராசி போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலம் ஆகி இருக்கிறார். மேலும், இவர் சீரியல் நடிகை மட்டும் இல்லாமல் தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். சின்னத்திரை மட்டும் இல்லாமல் வெள்ளித்திரை படங்களில் நடிகை ஸ்ரிதிகா நடித்து இருந்தார். அதோடு விளம்பர படங்களிலும் கூட நடித்து இருந்தார்.

ஸ்ரித்திகா குறித்த தகவல்:

அதிலும், 2008 ஆம் ஆண்டு வெளியான ‘மகேஷ், சரண்யா மற்றும் பலர்’ என்ற படத்தின் மூலம் தான் இவர் வெள்ளித்திரையில் பிரபலமானார். பின் இவர் வெண்ணிலா கபடிகுழு, தனுஷின் வேங்கை, பாலு தம்பி மனசிலே, மதுரை To தேனீ உள்ளிட்ட ஒரு பல படங்களில் நடித்து இருந்தார். அதன் பின் இவருக்கு சினிமாவில் பட அமைப்புகள் சரியாக அமையவில்லை என்ற உடன் மீண்டும் சீரியல் நோக்கியே வந்து விட்டார். இதனிடையே கடந்த 2019 ஆண்டு நடிகை ஸ்ரிதிகாவுக்கு, சதீஸ் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களுடையது அரேஞ்ச் மேரேஜ். இவருடைய திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு இருந்தார்கள்.

ஸ்ரித்திகா திருமணம்:

இவர்களின் திருமண புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. திருமணத்திற்கு பிறகும் ஸ்ரித்திகா சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது இவர் தெலுங்கு சீரியலில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை ஸ்ரித்திகா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர் 'மகராசி' சீரியலில் தன்னுடன் நடித்த ஆர்யன் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டார். இவரும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருமே தங்களுடைய முதல் திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டார்கள்.

ஸ்ரீதிகா- ஆரியன் பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஸ்ரீதிகா- ஆரியன் இருவருமே தங்களுடைய முதல் திருமண வாழ்க்கை குறித்து பகிர்ந்து இருக்கிறார்கள். அதில் ஸ்ரித்திகா, என்னுடைய முன்னாள் கணவர் ரொம்ப நல்லவர். அவரைப் பற்றி நான் எந்தக் குறையும் சொல்ல முடியாது. ஆனால், எனக்கும் அவருக்கும் திருமண வாழ்க்கையில் நிறைய மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் ஏற்பட்டது. அதோடு எனக்கு சின்ன வயதில் திருமணம் எல்லாம் ஆகவில்லை. எனக்கு திருமணம் ஆகும்போது 30 வயது. அதுவும் வீட்டில் பார்த்து தான் திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால், நான் எதிர்பார்த்தது போல என்னுடைய திருமண வாழ்க்கை அமையவில்லை. நிறைய ஏமாற்றம் தான் கிடைத்தது.

https://www.youtube.com/watch?v=aLw8e8ilcqY

விவாகரத்து குறித்து சொன்னது:

அதேபோல ஆரியனுக்கும் அவருடைய முன்னாள் மனைவிக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவர்கள் இருவரையுமே நான் சேர்த்து வைக்க முயற்சி செய்தேன். ஒரு கட்டத்தில் முடியாது என்றுதான் இருவருமே பிரிந்து விட்டார்கள். அதற்கு பிறகுதான் எங்கள் பெற்றோர்கள் நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அதை பற்றி முதலில் நாங்கள் யோசித்தோம். அதற்கு பிறகுதான் நாங்கள் இருவருமே திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தோம் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full