'நீ இல்லாமல் முதல் முறை' - சமீபத்தில் இறந்த தனது கணவர் குறித்து சுருதி போட்ட உருக்கமான பதிவு

By Rajkumar · 15/8/2023

கடந்த ஆண்டு பல சின்னத்திரை பிரபலங்கள் திடீர் திடீரென்று திருமணத்தை முடித்தனர். அதிலும் சீரியலில் ரீல் ஜோடிகளாக இருந்தவர்கள் நிஜவாழ்க்கையில் ரியல் ஜோடிகளாக மாறிவிடுகிறார்கள். ஷபானா - ஆர்யன், மதன் - ரேஷ்மா, சித்து- ஸ்ரேயா இவர்களைத் தொடர்ந்து தீபக்- அபிநவ்யா ஆகியோர் திருமணம் செய்து கொண்தார்கள். இந்த வரிசையில் கடந்த ஆண்டு திடீர் திருமணத்தை முடித்தார் சின்னத்திரை நடிகை ஸ்ருதி.

இவர் நாதஸ்வரம் சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அந்த தொடருக்குப் பின்னர் சுருதி பொன்னூஞ்சல், கல்யாண பரிசு, வாணி ராணி போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதேபோல ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் கூட நடித்திருக்கிறார்.

கடந்து ஆண்டு திருமணம் :

இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிய பாரதி கண்ணம்மா தொடரில் கூட சுருதி நடித்து இருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மே 27ஆம் தேதி ஸ்ருதிக்கு அரவிந்தின் என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் செய்து கொண்ட அரவிந்த் உடற்பயிற்சியாளராக இருந்து வந்தார். மேலும், இவர் 2022 ஆம் ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திடீர் மரணம் :

திருமணத்திற்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகி பிசினஸில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார் ஸ்ருதி. கடந்த மே 27 ஆம் தேதி தான் தங்கள் முதல் திருமண நாளை கொண்டாடி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரவிந்த் மாரடைப்பு காரணமாக காலமாகிஇருந்தார். வீட்டில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

ஸ்ருதி உருக்கமான பதிவு :

இப்படி ஒரு நிலையில் தன்னுடைய கணவரின் பிரிவை குறித்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார் சுருதி . அதில்கனத்த இதயம் பல நினைவுகளால் நிரம்பியது, முதன்முறையாக சென்னையை விட்டு வெளியேறுவது மிகவும் கடினமாக இருந்தது! நான் எங்கு சென்றாலும் உன்னையும் நினைவுகளையும் என் இதயத்தில் என்றென்றும் அழைத்துச் செல்கிறேன்! இனிவரும் வாழ்க்கைப் பயணத்திலும் இப்படியே தொடரும்' என்று பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by arvindshekar (@arvind__shekar)

கணவரின் இறப்பிற்கு காரணம் :

மேலும், அரவிந்த் உடற்பயிற்சி செய்த போது இறந்துவிட்டதாக சில யூடுயூப் சேனல்கள் தவறான செய்திகளை வெளியிட்டது. ஆனால், கணவரின் இறப்பிற்கு பின்னர் வீடியோ ஒன்றை வெளியிட்ட ஸ்ருதி 'மாரடைப்புனால இறந்துட்டார். அதைத் தாண்டி நாங்க வந்துட்டு இருக்கோம். அவர் ஒரு பாடிபில்டர், டிரெய்னர், ஜிம்ல ஒர்க்அவுட் பண்ணிட்டு இருக்கும்போது இறந்துட்டாரு, அது காரணம், இது காரணம் அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. அவர் சிவில் இன்ஜினியர். பிட்னஸ் மேல அவருக்கு ஆர்வம் அவ்வளவுதான்! இதுக்கிடையில் எந்த வதந்தியையும் பரப்ப வேண்டாம். அது ஒண்ணு மட்டும் உங்ககிட்ட வேண்டுகோள் வைக்கிறேன்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full