இரண்டாம் காதலை உறுதி செய்த ஸ்ருதி, காதலை சொன்னது யார் பாருங்க - வைரலாகும் வீடியோ.

By Rajkumar · 10/1/2022

தமிழ்சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமலுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே கமலின் இளைய மகள் ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான '7 ஆம் அறிவு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

முதல் காதலர்

தனது 6 வயதில் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடியுள்ளார் ஸ்ருதி ஹாசன்.7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதி.பூஜை, சிங்கம் 3 ,புலி, வேதாளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.அதற்கு முன்னர் 2009 இல் வெளியான லக் என்ற படத்தின் நடித்த மூலம் இந்தியிலும் கால் பதித்தார் ஸ்ருதி ஹாசன். இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார்.

ஸ்ருதியின் முதல் காதலர் :

அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காணமுடியவில்லை. நடிகை சுருதி ஹாசன், லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலும் ஸ்ருதிஹாசனும் காதலித்து வந்தனர்.இவர்கள் காதலித்த போது கூட தனது காதலனை, அப்பா கமல்ஹாசனிடம் ஒரு திருமணம் விழாவில் அறிமுகம் செய்து வைத்தார்.மேலும், இருவரும் மாலை மாறிக்கொண்டு திருமணம் செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதனை மறுத்தார் சுருதி ஹாசன்.

முதல் காதல் பிரேக் அப் :

இந்த நிலையில் ஸ்ருதி காதலர் காதலை முறித்துக்கொண்டதாக அறிவித்தார். ஸ்ருதி ஹாசனை பிரிந்த மைக்கேல் வேறு ஒரு பெண்ணுடன் காதலில் விழுந்தார். காதலை பிரிந்த சுருதி சிறிது காலம் மன அழுத்தத்தில் இருந்து வந்தார் சுருதி ஹாசன். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி ஒரு ஆணுடன் புகைடபங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார் ஸ்ருதி ஹாசன்.

புதிய காதலர் :

கடந்த சில மாதங்களாக சான்டனு ஹசாரிக்கா என்பருடன் சுற்றிக்கொண்டு இருக்கிறார். Doodle Art எனப்படும் ஓவிய கலையில் கைதேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீப காலமாக இவருடன் தான் ஸ்ருதி இருந்து வருகிறார். கடந்த ஆண்டு தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் சமீபத்தில் சென்ற புத்தாண்டு வரை அவருடன் தான் ஸ்ருதி கொண்டாடி இருந்தார்.

முதலில் காதலில் சொன்னது யார் :

இந்த நிலையில் ஸ்ருதி ஹாசனும் அவரது காதலர் சாந்தனு ஹசாரிகாவும் இன்ஸ்டாகிராமில் கப்பிள்ஸ் குவிஸ் வீடியோவை வெளியிட்டனர். அதில் அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அந்த வீடியோவில், தங்கள் உறவில் ‘ஐ லவ் யூ’ என்று முதலில் சொன்னது தான் தான், என்பதை தெரிவித்தார் ஸ்ருதி. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவ ஸ்ருதி ஹாசனின் காதலை தற்போது ரசிகர்களே உறுதி செய்துவிட்டனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full