அது மட்டும் பண்ணாதீங்க ப்ளீஸ், எல்லாரும் காயப்படுறாங்க - கணவரின் இறப்பிற்கு பின் சுருதி வெளியிட்ட முதல் வீடியோ.

By Ajju · 4/8/2023

கணவரின் இறப்பு குறித்து ஸ்ருதி வெளியிட்டுள்ள வீடியோ அவரது ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. கடந்த ஆண்டு பல சின்னத்திரை பிரபலங்கள் திடீர் திடீரென்று திருமணத்தை முடித்தனர். அதிலும் சீரியலில் ரீல் ஜோடிகளாக இருந்தவர்கள் நிஜவாழ்க்கையில் ரியல் ஜோடிகளாக மாறிவிடுகிறார்கள். ஷபானா - ஆர்யன், மதன் - ரேஷ்மா, சித்து- ஸ்ரேயா இவர்களைத் தொடர்ந்து தீபக்- அபிநவ்யா ஆகியோர் திருமணம் செய்து கொண்தார்கள். இந்த வரிசையில் கடந்த ஆண்டு திடீர் திருமணத்தை முடித்தார் சின்னத்திரை நடிகை ஸ்ருதி.

இவர் நாதஸ்வரம் சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அந்த தொடருக்குப் பின்னர் சுருதி பொன்னூஞ்சல், கல்யாண பரிசு, வாணி ராணி போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதேபோல ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் கூட நடித்திருக்கிறார்.

கடந்து ஆண்டு திருமணம் :

இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிய பாரதி கண்ணம்மா தொடரில் கூட சுருதி நடித்து இருந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி ஸ்ருதிக்கும், அரவிந்த் சேகர் என்பவருக்கும் பூச்சூடல் விழா நடைபெற்றது. இதுகுறித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஸ்ருதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

View this post on Instagram

A post shared by Sruthi Shanmuga Priya (@sruthi_shanmuga_priya)

அரவிந்த் குறித்த விவரம் :

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு மே 27ஆம் தேதி ஸ்ருதி -அரவிந்தின் திருமணம் நடைபெற்றது. திருமணம் செய்து கொண்ட அரவிந்த் உடற்பயிற்சியாளராக இருந்து வந்தார். மேலும், இவர் 2022 ஆம் ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகி பிசினஸில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார் ஸ்ருதி.

திடீர் மரணம் :

கடந்த மே 27 ஆம் தேதி தான் தங்கள் முதல் திருமண நாளை கொண்டாடி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்நிலையில் இன்று அரவிந்த் மாரடைப்பு காரணமாக காலமாகி இருக்கிறார். வீட்டில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

View this post on Instagram

A post shared by arvindshekar (@arvind__shekar)

ஸ்ருதி வெளியிட்ட வீடியோ :

மேலும், அரவிந்த் உடற்பயிற்சி செய்த போது இறந்துவிட்டதாக சில யூடுயூப் சேனல்கள் தவறான செய்திகளை வெளியிட்டது. இப்படி ஒரு நிலையில் கணவரின் இறப்பிற்க்கு பின் முதன் முறையாக வீடியோ வெளியிட்டுள்ள ஸ்ருதி ' நிறைய யூடியூப் சேனல்கள் என்ன நடக்குதுன்னே தெரியாம தேவையில்லாத தகவல்களை அதிகமா பரப்பிட்டு இருக்காங்க. தெரியாம நீங்க போடுற விஷயங்களால் ஃபேமிலியில் உள்ளவங்க ரொம்பவே காயப்படுறாங்க. அது மட்டும் பண்ணாதீங்க. எல்லா யூடியூப் சேனல்களிடமும் இதை நான் கேட்டுக்கிறேன்.

மாரடைப்புனால இறந்துட்டார். அதைத் தாண்டி நாங்க வந்துட்டு இருக்கோம். அவர் ஒரு பாடிபில்டர், டிரெய்னர், ஜிம்ல ஒர்க்அவுட் பண்ணிட்டு இருக்கும்போது இறந்துட்டாரு, அது காரணம், இது காரணம் அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. அவர் சிவில் இன்ஜினியர். பிட்னஸ் மேல அவருக்கு ஆர்வம் அவ்வளவுதான்! இதுக்கிடையில் எந்த வதந்தியையும் பரப்ப வேண்டாம். அது ஒண்ணு மட்டும் உங்ககிட்ட வேண்டுகோள் வைக்கிறேன். எல்லாரும் வயசானவங்க. ஃபேமிலியை நாங்க தான் ஸ்ட்ராங் பண்ணிட்டு இருக்கோம். அதனால தயவுசெய்து சூழ்நிலையை புரிஞ்சு நடந்துக்கோங்க' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full