அழகு சாதனம், 9ஸ்கின், பெமி9ஐ தொடர்ந்து புது பிசினஸில் களமிறங்கிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்

By subhashini · 20/9/2024

நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் சேர்ந்து புதிய பிசினஸ் தொடங்கியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மீடியாவில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகையாகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும், பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராகவும் நயன்தாரா கலக்கி கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

மேலும், சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். கடைசியாக நயன் நடித்த அன்னபூரணி படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இதை அடுத்து இவர் பல கோலிவுட், பாலிவுட் என பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும், இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார்.

நயன் குடும்பம்:

இதனிடையே இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் அழகான இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின் நயன் பிசியாக நடித்து வருகிறார். இப்படி நயன் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தொழிலதிபராகவும் கலக்கிக் கொண்டு வருகிறார். சில ஆண்டுகளாக நயன்தாரா பிசினஸ் வுமனாக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் முதலில் அழகு சாதனப் பொருள் தயாரிப்பில் கால் தடம் பதித்திருக்கிறார்.

தொழிலதிபர் நயன்தாரா:

தீ லிப் பாம் கம்பெனி என்று தன்னுடைய நிறுவனத்திற்கு பெயர் வைத்திருக்கிறார். இந்த நிறுவனத்தை நடிகை நயன்தாரா, சரும மருத்துவர் ரெனிட்டா ராஜன் என்பவருடன் இணைந்து துவங்கினார். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதை அடுத்து கடந்த ஆண்டு 9ஸ்கின் என்ற சரும பாராரிப்பு தயாரிப்புகளை நயன் அறிமுகப்படுத்திருந்தார். இது சருமத்திற்கான கிரீம், சீரம், ஆயில் போன்ற பொருட்களை வழங்குகிறது. இதனை அடுத்து ‘Femi 9’ என்ற நாப்கின் தயாரிப்பை நயன் அறிமுகப்படுத்தியிருந்தார்.

நயன்தாரா தயாரிப்பு நிறுவனம்:

இந்த தயாரிப்பும் மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் சேர்ந்து புதிய பிசினஸ் தொடங்கியிருக்கும் தகவல் தான் வைரலாகி வருகிறது. இவர்கள் டிக்கெட் 9 என்ற ஒரு ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் முதலீடு செய்து இருக்கிறார்கள். இது தொடர்பாக டிக்கெட் 9 நிறுவனம் பதிவு ஒன்று போட்டு இருக்கிறது. அதில், தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவும், அவருடைய கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனும் எங்களுடைய டிக்கெட் 9ல் முதலீடு செய்திருக்கிறார்கள்.

View this post on Instagram

A post shared by Ticket9™ (@the_ticket_9)

ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் பதிவு:

இவர்களுடைய முதலீடு எங்கள் நிறுவனத்தினுடைய மைல்கள். அவர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையால் நாங்கள் அர்ப்பணிப்புடன் எங்களுடைய வேலையை பார்ப்போம். இவர்களுடைய ஆதரவுடன் எங்களுடைய தொழில்நுட்பமும் சந்தையை விரிவுபடுத்த இருக்கிறோம். அதன் மூலம் பங்கேற்பவர்களுக்கு தங்கு தடையற்ற அனுபவத்தை கொடுக்க உள்ளோம் என்று கூறி இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full