விபத்தில் சிக்கி உயிரிழந்த பிரபல புகைப்பட கலைஞர்.! பரிதாப நிலையில் கொம்பன் நடிகர்.!

By Rajkumar · 3/9/2019

தமிழில் விஜய் அஜித் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் புகைப்பட கலைஞராக பணியாற்றிய ஸ்டில் சிவா நேற்று கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது இந்த விபத்தில் சிக்கி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் நடிகர் தவசி.

இவர் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், கொம்பன், விஸ்வாசம் போன்ற பல்வேறு படங்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு படப்பிடிப்பை முடித்துவிட்டு மீண்டும் வீடு திரும்பிய போது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அஜித்குமார் நடித்த 'அவள் வருவாளா' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் ராஜ்கபூர்.

இதையும் பாருங்க : மீண்டும் ட்விட்டருக்கு வந்த கஸ்தூரி.! முதல் பதிவிலேயே லாஸ்லியாவை பங்கமாக கலாய்த்துள்ளாரே.! 

இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் கோம்பை. இவர் தற்போது ஊர்மரியாதை என்னும் 'டிவி சீரியல்' இயக்குகிறார். இதன் தொடரின் படப்பிடிப்பு கோம்பையில்நடைபெற்று வருகிறது. இந்த சீரியலில் ஸ்டில் சிவா புகைப்பட கலைஞராக பணியாற்றியுள்ளார். மேலும், இந்த சீரியலில் நடிகர் தவசியும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை, (செப்.,2) கோம்பை மலையடிவார திருமலை ராயப்பெருமாள் கோயில் பகுதியில் சீரியலின் படப்பிடிப்பை முடித்து விட்டு ஸ்டில் சிவா, தவசி இருவரும் காரில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது தான் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவர்களது கார் இரட்டை புளி ஓடை பகுதியில் நிலை தடுமாறி, அருகில் உள்ள தோட்டத்தில் கவிழ்ந்ததுள்ளது

இதில் காரை ஓட்டி வந்த தவசியும், சிவாவும் பலத்த காயமடைந்தனர். பின்னர் அருகில் இருந்த உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இருவரும் அவசரா அவசரமாக ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஆனால், கொண்டு செல்லும் வழியில், சிவா உயிரிழந்தார். ஆனால், இந்த விபத்தில் காயத்துடன் உயிர் தப்பிய நடிகர் தவசி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கோம்பை போலீசார் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்டில் சிவா உயிரிழந்த சம்பவத்தால் தமிழ் சினிமா பிரபலங்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர் மேலும் தமிழ்சினிமா புகைப்பட சங்கம் சார்பாக ஸ்டில் சிவாவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Tamil Behind Talkies AMP · Quick view
View full