தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக அவதாரம் எடுத்து இருக்கிறார். அதோடு தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் கமலஹாசன். மேலும், கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகியிருந்த படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில் உட்பட பல சேதுபதி, நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது.

இதனை அடுத்து மணிரத்தினம் இயக்கும் படத்தில் கமல் நடிக்கிறார். ஏற்கனவே கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணியில் நாயகன் என்ற படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த படத்திற்கு தக் லைஃப் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. உலகநாயகன் கமலஹாசனுடைய ராஜ் கலர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயின்ட் மூவிஸ், ஆர் மகேந்திரன், சிவா ஆனந்த் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.

Advertisement

கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணி:

இந்த படத்தில் புகழ்பெற்ற நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தில் நடிகர் சிலம்பரசனும் இணைந்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ‘தக் லைஃப்’ படத்தில் சிலம்பரசன் நடிப்பதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக பிரத்யேக போஸ்டரையும், வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் தக் லைப் படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஐசரி கணேஷ் அளித்த புகார்:

அதாவது, ஐசரி கணேஷ் நிறுவனத்தின் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெந்து தணிந்தது காடு படம் வெளியாகியிருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இதை அடுத்து ஐசரி கணேஷ் தயாரிக்கும் கொரோனா குமார் என்ற படத்தில் நடிக்க சிம்பு கமிட்டாகி இருந்தார். இதற்காக இவருக்கு 9.5 கோடி சம்பளமாக பேசப்பட்டது. இதற்கு அட்வான்ஸ் தொகையாக 4.5 கோடியை சிம்பு வாங்கிய விட்டார்.

Advertisement

சிம்பு மீது ரெட் கார்ட்:

இருந்தாலும் இந்த படத்தில் சிம்பு நடித்துக் கொடுக்காமல் இழுத்து அடித்துக் கொண்டே வந்திருக்கிறார். இதனால் சிம்பு தக் லைப் படத்தில் நடிக்க கூடாது என்று தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது புகார் அளித்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சிம்புவுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். தற்போது இந்த சம்பவம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே கமலஹாசன் மீது திருப்பதி பிரதர்ஸ் ரெட் கார்டு கொடுத்திருந்தார்கள். சில வருடங்களுக்கு முன்பு கமலஹாசன் நடிப்பில் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் வெளியாகியிருந்த உத்தம வில்லன் படம் மிக படு தோல்வி அடைந்திருந்தது.

Advertisement

கமல் மீது ரெட் கார்ட்:

இதனுடைய நஷ்டத்தை ஈடு செய்வதற்காக திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கமலஹாசன் உறுதி அளித்திருந்தார். இருந்தாலும் 9 வருடங்கள் ஆகியும் கமலஹாசன் எந்த பதிலும் படத்திலும் நடிக்கவில்லை, எந்த பதிலும் கொடுக்கவில்லை. இதனால் கமலஹாசன் மீது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ரெட் கார்ட் கொடுத்து இருக்கிறார்கள். இப்படி தக் லைப் படத்தில் நடிக்கும் கமல், சிம்புவின் மீது ரெட் கார்ட் புகார் கொடுத்திருப்பதால் சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

Advertisement