எது மாஸ் ? வெந்து தணிந்தது காடு விழாவில் சிம்புவின் பேச்சு படு வைரல் - தனுசுக்கு பதிலடி என்று கூறும் ரசிகர்கள்.

By Ajju · 3/9/2022

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் இயக்குனர், நடிகர் டி ராஜேந்திரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இடையில் இவரின் படங்கள் தோல்வி அடைந்தது.

https://twitter.com/chettyrajubhai/status/1566036148388241413

இதன் காரணமாக சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார். பின் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதோடு சமீப காலமாகவே சிம்பு அவர்கள் தன்னுடயை படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தர். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் வெளியாகி இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து சிம்பு நடிப்பில் அடுத்ததாக மகா திரைப்படம் வெளியாகி இருந்தது.

https://twitter.com/YogeshYadhav8/status/1565936986099433472

இதனை அடுத்து சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் மீது ரசிகர்கள் பலரும் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றன. இந்த படத்தை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக உள்ள பத்து தல படத்தில் சிம்பு நடிக்கிறார். இப்படி பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பலரும் சிம்புவின் திருமணத்தைப் பற்றி தான் கேள்வி எழுப்பி வருகிறார்கள். சிம்பு முதன் முதலாக ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை தான் காதலித்து இருந்தார்.

ஆனால், இவர்களின் திருமணத்திற்கு ரஜினிகாந்த் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதற்கு பிறகு தான் ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு சிம்பு அவர்கள் நயன்தாரா, ஹன்சிகா என்று பல பேரை காதலித்தார் என்று சோசியல் மீடியாவில் பரவி வந்தது. இருந்தும் இவர் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதனால் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் சிம்புவின் திருமணத்தை குறித்து கேள்வி எழுப்பி கொண்டே இருந்தார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த விழாவில் சிம்பு அவர்கள், யாரையும் திருமணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள். சமூகத்தின் கட்டாயத்திற்காக பல தவறான கல்யாணம் நடந்திருக்கிறது என்று கூறியிருந்தார். இப்படி இவர் கூறியிருந்தது தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்தை குறித்து தான் கூறியிருக்கிறார் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் சிம்பு அவர்கள், நம்ம படத்த மாசு, கிளாஸ்னு நம்ம சொல்லக்கூடாது. மத்தவங்க சொல்லணும் என்று கூறியிருந்தார்.

இவர் இப்படி சொன்னதற்கு காரணம் திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் எது மாசு தெரியுமா என்று தனுஷ் சொன்னதை அப்போது சோசியல் மீடியாவில் பயங்கர டெம்ளேட்டுகளாக உருவாக்கியிருந்தது. தனுசை தாக்கி தான் சிம்பு சொல்லி இருக்கிறார் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதே போல் ஏற்கனவே ஈஸ்வரன் படத்தில் சிம்பு, நீ அழிக்க வந்த அசுரன்னா, நான் காக்க வந்த ஈஸ்வரன் டா என்று தனுசை தாக்கி பேசியிருந்தார் என்று ரசிகர்கள் தற்போது சோசியல் மீடியாவில் மீம்ஸ்களை வைரலாக்கி வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full