தோள்மேல கை போடுறாரு, 2 கிராம் தங்கத்துக்கு முத்தம் - விஜயை விமர்சித்தவருக்கு மாணவி கொடுத்த பதிலடி

By subhashini · 13/6/2025

விஜயை மோசமாக விமர்சிப்பவர்களுக்கு கல்வி விருது விழாவில் மாணவி கொடுத்து இருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டின் என்றென்றும் இளைய தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். கடந்த சில வாரங்களாக விஜய்யின் கல்வி விருது விழா குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த மூன்று வருடமாக இந்த கல்வி விருது விழாவை விஜய் நடத்தி வருகிறார்.

https://www.youtube.com/watch?v=ZtMcH1AhrCg

பத்தாம் மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்து வருகிறார்கள். வருடம் வருடம் இந்த விழா வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த 2025 ஆம் வருடத்திற்கான கல்வி விருது விழா சமீபத்தில் தான் தொடங்கப்பட்டது. இதுவரை முதல் இரண்டு கட்ட விழா வெற்றி கரமாக நடந்து முடிந்தது. தற்போது மூன்றாம் கட்ட விழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் 151 தொகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

கல்வி விருது விழா:

ஒவ்வொருவரும் மேடைக்கு அழைத்து அவர்களுக்கு சால்வை அணிவித்து ஊக்க தொகையையும் விஜய் விஜய் அவர்கள் வழங்கி இருந்தார். இப்படி விஜய் வருடம் வருடம் மாணவர்களுக்கு கல்வி விருது விழா நடத்துவது பாராட்டப்பட்டாலும் இன்னொரு பக்கம் விமர்சித்து தான் வருகிறார்கள். அதில் சிலர், இதை விஜய் பப்ளிசிட்டிக்காக தான் செய்கிறார். இரண்டு கிராம் தங்கத்துக்காக ஒரு கூத்தாடியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதா? என்றெல்லாம் மோசமாக விமர்சித்து இருக்கிறார்கள்.

விஜய் பற்றிய விமர்சனம்:

இதையெல்லாம் தாண்டி தற்போது ஒரு படி மேலே போய் வேல்முருகன், விஜய் மாணவிகளை அனுமதி இல்லாமல் தொடுவது ரொம்ப அநாகரிகமான செயல். இது அவருடைய வக்கிர புத்தியை காமிக்கிறது என்றெல்லாம் கூறியிருக்கிறார். இதை பார்த்து பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், விஜய் இது தொடர்பாக எந்த ஒரு விளக்கமும் பதிலையும் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக இன்று நடந்த கல்வி விருது விழாவில் விஜய் கையால் பரிசு வாங்கிய மாணவி பதிலடி கொடுத்திருக்கிறார்.

மாணவி கொடுத்த பதிலடி:

அதில் அந்த மாணவி, விஜய் தோள்மேல கை போடுகிறார் என்று ரொம்ப மோசமாக விமர்சித்து இருந்தார்கள். அவர் எங்கள் தோள் மீது கை போடும்போது அவரை எங்க அப்பாவாக, ஒரு அண்ணனாக, ஒரு உயிராக தான் பார்க்கிறோம். அவருக்காக நாங்கள் உயிராக இருப்போம். தேங்க்யூ அப்பா என்று சொல்லி அந்த மாணவி
சொல்கிறார். அதற்குப்பின் அந்த மாணவி தோள் மீது கை போட்டு விஜய் போட்டோவுக்கும் போஸ் கொடுத்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பலருமே விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

விஜய் அரசியல்:

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் முடி சூடா மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். தற்போது இவர் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதுதான் இவருடைய கடைசி படம். இதை அடுத்து இவர் முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் விஜய் அவர்கள் தன்னுடைய கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் வைத்திருந்தார். அதற்கு பிறகு பிரம்மாண்ட மாநாட்டை நடத்தி இருந்தார். தற்போது தன்னுடைய அரசியல் பணியில் விஜய் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.

behindtalkies AMP · Quick view
View full