தமிழ் சினிமா துறை உலகில் வெளிவந்து பெரிய அளவில் வெற்றி பெற்ற “மகளிர் மட்டும்” படம் சிங்கீதம் சீனிவாசராவ் என்பவரால் இயக்கப்பட்டு 1994ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படம் கமலஹாசன் தயாரிப்பில் ரேவதி, ரோகினி, ஊர்வசி, நாசர் ஆகியோர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் நாசர் வில்லனாக நடித்துள்ளார். இந்த மகளிர் மட்டும் படத்தை ஆங்கில படத்திலிருந்து தான் ரீமேக் செய்யப்பட்டது ஆகும். இந்த உலகில் பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும்,பல கட்டுப்பாடுகளும், பெண்களுக்கான அடையாளம் வேண்டும் என்ற பல கருத்துக்களை தெரிவிப்பதாகவும்.

இந்த படத்தில் பெண் பித்து பிடித்த பாண்டியன் கதாபாத்திரமாக நாசர் நடித்திருப்பார். கம்யூட்டர் டிசைனிங் தெரிந்த பெண் சந்தியாவாக ரேவதி, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பிராமிணப்பெண்ணாக ஊர்வசி, அங்கே கூட்டி பெருக்கி வேலை செய்யும் பெண்ணாக ரோகினி வருவார்கள். இவர்கள மூவரும் பாண்டியன் நாசர் கதாபாத்திரத்தின் பெண் பித்தால் பாதிக்கப்பட்டவர்கள். இந்நிலையில் தவறுதலாக எலிமருந்து கலந்த காபியை ஊர்வசி நாசருக்கு கொடுத்து விடுவார். இதனால் நாசர் மயங்கி விழ பதறிப்போய் நாசரை மருத்துவமனையில் இவர்கள் மூவரும் சேர்ப்பார்கள்.

Advertisement

ஆனால் நாசர் மயங்கி விழுந்தது வேறு காரணத்திற்காக. இந்நிலையில் அதே மருத்துவ மனையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தீவிரவாதியை பற்றிய தகவல் இவர்களுக்கு வருகிறது. இதனால் நாசர்தான் இறந்துவிட்டார் என பயந்து அவரது சடலத்தை டிஸ்போஸ் செய்ய எடுத்து செல்கின்றனர். ஆனால் அது வேறொருவரின் சடலம். இந்நிலையில் ஊர்வசி எலி மருந்து கலந்த விஷியத்தை தெரிந்து கொண்டு இவர்கள் மூவரையும் தன்னுடைய ஆசைக்கு இனனுங்கும் படியும் இலையென்றால போலீஸில் காட்டி கொடுப்பதாக கூறி அவர்கள் மூவரையும் கட்டாயப்படுத்துகிறார்.

ஆனால் பாண்டியன் நாசரை இவர்கள் மூவரும் சேர்ந்து கட்டி போட்டு ரேவதி தலைமையில் கம்பெனியில் பல மாற்றங்கள் நடக்கிறது. இந்நிலையில் கம்பெனியின் எம்டி வருவதாக தகவல் கிடைத்த நிலையில் நாசரும் இவர்களிடம் இருந்து தப்பிக்கிறார். இதற்கு பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை. இந்த படத்தின் மூலம் ஆணாதிக்கம், பெண்ணடிமை என்ற கொள்கைகளை ஒழிக்கும் நோக்கத்தில் தான் வெளிவந்தது என்றும் கூறினார்கள். பாரதியார் கண்ட புதுமை பெண் உருவாக வேண்டும் என்ற நோக்கில் வந்தது என்ற சில கருத்துக்களும் வந்தன.

Advertisement

படத்தை வாங்க மறுத்த விநியோகஸ்த்தர்கள் :

பொது இடங்கள் மற்றும் வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு வரும் அவலங்களை குறித்து வந்த கதையாகும். இந்த படம் வெளிவந்து “வெற்றி விழா” கொண்டாடும் அளவிற்கு மக்களிடையே அதிக வரவேற்பு பெற்றது. ஆனால் படம் வெளிவருவதற்கு முன்னால் ஹீரோ இல்லாமல் அதாவது கதாநாயகன் இல்லாமல் எப்படி பெண்களை மட்டும் வைத்து வந்த படம் வெளியிட்டால் ஹிட்டாகுமா? இல்லையே? என்ற கவலையில் இயக்குனர்களும், படம் சார்ந்த மற்றவர்களும் கவலையில் முன்வரவில்லை.

Advertisement

சாதித்து காட்டிய கமல் :

கடைசியில் படத்தை தயாரித்த கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் படத்தை வெளியிட்டது. ஆனால் படம் பெரிய அளவில் ஹிட் கொடுத்து 175 நாட்கள் ஓடி வெள்ளி விழா கண்டது. எந்த ஒரு இரட்டை வசனமும் அல்லது விமர்சனமான காட்சிகளோ இல்லாமல் நாட்டில் ஏற்படும் முக்கிய கருத்துகளைக் கொண்டு நகைச்சுவையாக சொன்ன திரைப்படங்களில் முன்னேடி இப்படம் என்று சொல்லலாம்.

29ஆண்டுகள் நிறைவு விழா :

இதனையே கொஞ்சம் கடுமையாக சொல்லியிருந்தால் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்திருக்குமா என்று தெரியவில்லை. இயக்குனர் சிங்கீதம் இயக்கிய சிறந்த படங்களில் இந்த படமும் ஒன்றாகும். மேலும் இப்படம் தமிழ் ஹிந்தி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பெயர்க்கப்பட்ட இப்படம் 1994 ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி வெளியான நிலையில் நேற்று தன்னுடைய 29 ஆவது வருட விழாவை கொண்டாடியது. அனைவரையும் எதிர்த்து நின்று “மகளீர் மட்டும்” படத்தை வெளியிட்ட கமலஹாசனின் முயற்சியினால் தான் இப்படம் பெரிய அளவில் வெற்றி கண்டது என்பது குறிப்பிடதக்கது.

Advertisement