அந்த விஷயத்துக்காக வனிதா வீட்டை தான் பயில்வான் பயன்படுத்தினார் - வனிதாவையும் இழுத்த சுசித்ரா

By Arun · 16/5/2024

வனிதா விஜயகுமார், பயில்வான் ரங்கநாதன் குறித்து பாடகி சுசித்ரா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடகியாக திகழ்பவர் சுசித்ரா. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவர் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தவுடன் ரேடியோ மிர்ச்சியில் சேர்ந்து மீடியாவிற்குள் நுழைந்தார். அதற்குப் பிறகு இவர் பல நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்து இருக்கிறார்.

https://twitter.com/suria____/status/1790991251690676338

அதற்கு பின்பு இவர் சினிமாவில் பாடவும் ஆரம்பித்தார். பின்பு தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் பாடி இருக்கிறார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தென்னிந்திய சினிமாவில் பாடகியாக பயணித்து வருகிறார். இதற்கிடையில் இவர் நடிகர் கார்த்திக் குமாரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 12 ஆண்டுகள் ஒன்றாக தான் வாழ்ந்து வந்தார்கள். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள்.

சுசித்ரா-கார்த்திக் குமார் குறித்த தகவல்:

அதுமட்டுமில்லாமல் சில ஆண்டுகளாகவே நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், சஞ்சித் செட்டி போன்ற பல பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை “சுச்சி லீக்ஸ்” என்ற பெயரில் வெளியாக்கி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இது குறித்து பலருமே விமர்சித்து இருந்தார்கள். இருந்தாலும், தன் தரப்பு நியாயத்தை சுசித்ரா கூறியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாடகி சுசித்ரா, என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பணத்தைக் கொடுத்து என்னை பற்றி தவறாக சித்தரித்து வருகிறார். அவரும் தனுஷும் சேர்ந்து குடித்து விட்டு ஒரு அறைக்குள் செல்வதை நான் பார்த்திருக்கிறேன்.

https://www.youtube.com/watch?v=Ed17PgQDQT4

பாடகி சுசித்ரா பேட்டி:

அந்த அறைக்குள் அவர்கள் சென்றால் என்ன செய்வார்கள்? என்று எனக்கு தெரியும். அதேபோல் எனக்கு திருமணமாகி இரண்டு வருடத்திலேயே என்னுடைய கணவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பது எனக்கு தெரிந்தது. இருந்தாலும் என்னுடைய தாய் தந்தைக்காக தான் நான் பொறுமையாக சேர்ந்து வாழ்ந்தேன். அதற்கு பிறகும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 12 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் விவாகரத்து பெற்றோம். பயில்வான் ரங்கநாதன் என்னை பற்றி மோசமாக விமர்சிப்பதற்கும் என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் தான் காரணம்.

கார்த்தி குறித்து சொன்னது:

அவர்தான் பணம் கொடுத்து இந்த மாதிரி வேலைகளை செய்ய சொல்கிறார். அதோடு கோலிவுட்டில் போதை கலாச்சாரம் தான் தலைதூக்கி இருக்கிறது. கமலின் பர்த்டே பார்டிகளில் கூட வெள்ளி தாம்பாளத்தில் கொக்கைன் பரிமாறி இருந்தார்கள். சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் வெளி வந்த புகைப்படங்கள் எல்லாம் திரிஷா தான் எனக்கு கொடுத்தார். வனிதா விஜயகுமார் தன்னுடைய பங்களா ஒன்றை ஆபாச பட ஷூட்டிங்கிற்காக கொடுத்திருந்தார்.

https://www.youtube.com/watch?v=07xCeDctMmU

வனிதா குறித்த சர்ச்சை:

அதை அவர் பயில்வான் இடம் தான் கொடுத்திருந்தார். அதனால் தான் வனிதா உடைய பங்களாவுக்கு சீல் வைத்திருந்தார்கள். அதோடு பயில்வான், வனிதாவை பற்றி எந்த ஒரு தவறான கருத்தும் பேசாத காரணமும் இதுதான். பயில்வான் ரங்கநாதன் பிட்டு பட ஏஜெண்டாக தான் இருந்தார். சென்னையில் ஆபாச பட சூட்டிங் நடப்பதற்கு அவர் தான் உதவி செய்து இருக்கிறார். இந்த விஷயங்கள் எல்லாம் நான் பாடகி ஆவதற்கு முன்பே தெரியும். சரத்குமார், ராதா ரவி போன்றவர்களால் தான் தமிழ்நாட்டில் இது போன்ற ஆபாச பட சூட்டிங் நடத்தப்படுவது தடுக்க முடிந்தது என்று கூறியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full