ஆர்த்தி கூட ஜெயம் ரவி இத்தனை நாள் வாழ்ந்தது பெரிய விஷயம் - மீண்டும் வைரலாகும் பாடகி சுசித்ரா வீடியோ

By ·

ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து குறித்து பாடகி சுசித்ரா ஏற்கனவே பேசி இருந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கோலிவுட்டில் பிரபலமான ஜோடிகளின் விவாகரத்து குறித்த செய்தி தான் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சமந்தா-நாக சைதன்யா, தனுஷ்-ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ்- சைந்தவியை தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

அதாவது பிரபல நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி இருவரும் பிரிய இருப்பதாக சமீபத்தில் அதிகமாக பேசப்பட்டு வந்தது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் இவருடைய மூத்த மகன் ஆரவ், ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியிருந்த 'டிக் டிக் டிக்' என்ற படத்தில் நடித்திருந்தார்.

ஜெயம் ரவி- ஆர்த்தி சர்ச்சை:

மேலும், ஜெயம் ரவி தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. அதோடு தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடிகளாக ஜெயம் ரவி-ஆர்த்தி திகழ்ந்து கொண்டு இருந்தார்கள். இந்நிலையில் தான் நடிகர் ஜெயம் ரவி சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம்.

ஜெயம் ரவி அறிவிப்பு:

ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரைத்துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடகத் துறை மற்றும் சமூக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

விவாகரத்து குறித்து:

நீண்ட கால யோசனை மற்றும் பல பரிசீலனைகளுக்கு பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த நேரத்தில் எனது தனியுரிமைக்கு மதிப்பளிக்கும்படி அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இவர்களின் பிரிவுக்கான காரணம் குறித்து பிரபல பாடகி சுசித்ரா ஏற்கனவே தனது யூடியூப் சேனலில் பேசி இருந்தார். அதில், ஜெயம் ரவி -ஆர்த்தி விவாகரத்து பிரச்சனையில் என்னுடைய ஆதரவு ஜெயம் ரவிக்கு தான். ஆர்த்தி கூட எப்பவுமே வாழ முடியாது.

https://www.youtube.com/watch?v=jNWOKw9_IFA&t=474s

சுசித்ரா கூறியது:

அவர் இவ்வளவு நாள் வாழ்ந்ததே பெரிய விஷயம். ஆர்த்தி ரொம்ப ஆடம்பரமான பொண்ணு. இதற்காகவே ஜெயம் ரவி இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படியே வீட்டுக்கு வந்தாலும் ஆர்த்தி என்ன மனநிலையில் இருப்பார்? என்று சொல்லவே முடியாது. அவர் ஏதோ அழகாக இருந்ததால் தான் இத்தனை ஆண்டுகள் ஜெயம் ரவி அவரின் முகத்தை பார்த்து வாழ்ந்து விட்டார். ஆனால், எத்தனை நாள் அழகு நீடிக்கும். அது மட்டும் இல்லாமல் ஜெயம் ரவியின் குடும்பம் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த குடும்பம். அவர்களுடைய குடும்பம் எப்போதும் மற்றவர்களை மதிக்க கூடியவர்கள் என்று கூறியிருந்தார். தற்போது அந்த வீடியோ தான் மீண்டும் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full