பராசக்தி படத்துக்கு பல கோடிகளில் சம்பள பாக்கி - நீதிமன்றம் சென்ற இயக்குனர் சுதா கொங்கரா
பராசக்தி படத்துக்கு பல கோடிகளில் சம்பள பாக்கி
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சுதா கொங்கரா. இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடைசியாக வெளியாகி இருந்த படம் பராசக்தி.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் சம்பள பாக்கி பிரச்சினை தான் தற்போது இணையத்தில் பயங்கர சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, பராசக்தி படத்திற்காக கொங்கரா சம்பள பாக்கி தொகை 8.39 கோடி.
சுதா கொங்கரா வழக்கு:
இதை டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் கொடுக்கவில்லை என்று தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக சுதா கொங்கரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், பராசக்தி படத்திற்காக கொங்கராவின் மொத்த சம்பளம் 15 கோடி என்று பேசப்பட்டது. ஜிஎஸ்டி தனியாக சேர்க்கப்பட்டு மொத்த தொகை 17.70 கோடி என முடிவு செய்திருக்கிறார்கள். ஒப்பந்தப்படி பராசக்தி படம் தொடர்பான ஒட்டுமொத்த அறிவுகளையும் சுதாகர் தயாரிப்பு நிறுவனத்திற்கு மாற்றி கொடுத்திருக்கிறார்.
சம்பள பாக்கி:
பராசக்தி படமும் ஜனவரி மாதமே வெளிவந்தது. ஆனால், இதுவரை அவருக்கு 9.31 கோடி மட்டுமே வழங்கப்பட்டதாக குறிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 8.39 கோடி தொகையை தயாரிப்பு நிறுவனம் இன்னும் வழங்கவில்லை. இது தொடர்பாக சுதா கொங்கரா தரப்பில் கேட்டும் தயாரிப்பு நிறுவனம் எதையுமே சொல்லாமல் இருக்கிறார்கள். இதனால் பராசக்தி படத்தின் சாட்டிலைட் தொலைக்காட்சி வெளியீட்டு உரிமைக்குத் தடை விதிக்க வேண்டும். அதேபோல் டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தற்போது இதயம் முரளி படம் வெளியாக இருக்கிறது.
நீதிபதி உத்தரவு:
இந்த படம் ஜூலை 10-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். சம்பள பாக்கியை தராமல் தங்களுடைய அடுத்த படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் பணிகளை தொடங்கியதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார். பின் இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பராசக்தி படத்தை தொலைக்காட்சிகளில் வெளியிடக்கூடாது. அதுமட்டுமில்லாமல் ஜூலை ஏழாம் தேதிக்குள் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வருகிற ஜூலை எட்டாம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று கூறி இருக்கிறார்.