பராசக்தி படத்தில் நடிக்க மறுத்த சூர்யா - உண்மையை போட்டுடைத்த இயக்குனர் சுதா கொங்கரா
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த படம் மதராசி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வசூலும் பெற்று இருந்தது.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இது ஜிவி பிரகாஷ் உடைய நூறாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஜனவரி பத்தாம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
பராசக்தி படம்:
தற்போது இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் சுதாகர், இந்த படத்தின் கதையை முதலில் சூர்யாவிடம் தான் சொல்லியிருந்தோம். கொரோனா சமயத்தில் இந்த கதையை சூர்யா கேட்டார். கேட்டதுமே அவருக்கு ரொம்பவே பிடித்த போனது. உடனே சூர்யா கதையை டெவலப் செய்ய சொல்லி இருக்கிறார்.
சுதா பேட்டி:
அந்த சமயத்தில் லாக்டவுன் போடப்பட்டிருந்ததால் வெளியே சென்று கதையை ரீசார்ஜ் செய்ய முடியவில்லை. பின்னர் எல்லாம் முடிந்த பிறகு ஷூட்டிங்க்கு ஒட்டுமொத்தமாக இத்தனை நாட்கள் வேண்டும் என்று சூர்யாவிடம் கேட்டேன். சூர்யாவால் அதை செய்ய முடியவில்லை. இதனால் தான் சூர்யா அந்த படத்தில் இருந்து விலகினார். அதேபோல் சூரரை போற்று படத்திற்கு முன்பு இருந்தே சிவாவுக்கு கதை இருக்கிறதா என்று சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா என்னிடம் கேட்டுக் கொண்டிருப்பார்.
சிவா-சூர்யா பற்றி சொன்னது:
அப்போது எதுவுமே இல்லை. அதற்கு பிறகு தான் புறநானூறு படம் டிராப்பானது. அந்த விஷயம் அறிந்த உடனே அவர் என்னை அழைத்து சிவாவை நடிக்க வைக்கலாமா என்று கேட்டார். நானுமே அதற்கு ஓகே சொன்னேன். அப்படி தான் இந்த கதைக்குள் சிவகார்த்திகேயன் வந்தார். படம் நன்றாக வந்து இருக்கிறது. எல்லோருக்கும் படம் பிடிக்கும் என்று கூறி இருக்கிறார்.