அவதூறு பரப்புகிறார்கள், இது ரசிகர்களின் மோசமான செயல் - இயக்குனர் சுதா கொங்கரா ஆதங்கம்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த படம் மதராசி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வசூலும் பெற்று இருந்தது.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இது ஜிவி பிரகாஷ் உடைய நூறாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முதலில் ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகுவதாக இருந்தது.
பராசக்தி படம்:
பின் ஜனவரி 10 ஆம் தேதி இந்த படத்தை வெளியிட்டு இருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க இந்தி திணிப்பை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பின் இந்த படத்தினுடைய சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், அதர்வா, சுதா, ஸ்ரீலீலா உட்பட பலர் கலந்து கொண்டிருந்தார்கள். படம் பற்றி பல சுவாரசியமான விஷயங்களை படக்குழு பேசி இருந்தார்கள்.
சுதா பேட்டி:
இது ஒரு பக்கம் இருக்க, பராசக்தி படம் வெளியாகுவதற்கு முந்தைய நாள் வவிஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாகுவதாக இருந்தது. ஆனால், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ஜனநாயகன் படம் வெளியாகவில்லை. படம் எப்போது வெளியாகும் என்றும் தெரியவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் கொந்தளித்து இருக்கிறார்கள். பராசக்தி படம் வெளியானதால் பலருமே சிவகார்த்திகேயனையும் படத்தையும் விமர்சித்து வருகிறார்கள்.
https://www.youtube.com/watch?v=DzuGJe-yrN0
விஜய் ரசிகர்கள் செய்தது:
சோசியல் மீடியாவில் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் இயக்குனர் சுதா, ஒரு படத்திற்கு எதிராக தெரியாத ஐடிகளுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு மோசமான வகையில் அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அது எங்கிருந்து வருகிறது என்பது உங்களுக்கே தெரியும். இந்த வகையான தாக்குதல் அரசியல் சார்ந்தவை கிடையாது. இது படம் வெளியிடப்படாத ஒரு நடிகருடைய ரசிகர்களிடமிருந்து வருகிறது. இந்த ரவுடித்தனம் மற்றும் குண்டர் கலாச்சாரத்திற்கு எதிராக நாம் போராட வேண்டி இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.