திருமணத்திற்கு முன் நடிகை சுஹாசினி இப்படி ஒரு கண்டிஷன் போட்டாரா? என்னன்னு நீங்களே பாருங்க
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் சுஹாசினி. தற்போது இவர் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடகர், தொகுப்பாளர் என பல துறைகளில் கலக்கி கொண்டு இருக்கிறார். இவர் பிரபல இயக்குனர் சாருஹாசனின் மகள் அவர். இவரது அப்பாவின் சகோதரர் உலக நாயகன் கமலஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழும் மணிரத்தினத்தின் மனைவி ஆவார்.
மேலும், நடிகை சுஹாசினி அவர்கள் தமிழ் சினிமாவில் “நெஞ்சத்தை கிள்ளாதே” என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமாகினார். இவர் அதற்க்கு முன்பே உதிர் பூக்கள், காளி , ஜானி போன்ற படங்களில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருந்தார். பின் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, நடிகை சுஹாசினி 2003ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆங்கில படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கதாபாத்திரத்தில் படங்களில் நடித்து வருகிறர்.
சுஹாசினி திரைப்பயணம்:
சுஹாசினி 80ஸ் களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்தார்.
அதன் பின் இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது கூட இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் பிசியாக இருந்து வருகிறார். மேலும், இவர் வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், ஜட்ஜ் ஆகவும் இருந்து வருகிறார்.
இதற்கிடையில் நடிகை சுஹாசினி அவர்கள் தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான இயக்குனராக திகழும் மணிரத்தினத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நந்தன் என்ற ஒரு மகன் இருக்கிறார்.
சுஹாசினி பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை சுகாசினி தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கூறியிருந்தது, வேலையையும் வீட்டு வேலையும் சமாளிப்பது பெரிய விஷயமே இல்லை. என்னுடைய கணவர் ரொம்பவே எளிமையானவர். அதுதான் எனக்கு ஒரு பிளஸ். எங்கள் இருவருடைய எண்ணங்களுமே ஒன்றாக இருக்கின்றது. நான் வேலையில் இருக்கும் போது மனிதத்தனம் என்னை தொந்தரவு செய்யவே மாட்டார். வீட்டில் எந்த பிரச்சினை வந்தாலும் அவரே சமாளித்துக் கொள்வார். ஒருவேளை மணிரத்தினம் படப்பிடிப்பில் இருக்கும் போது வீட்டில் பிரச்சனை வந்தால் அவர் படபிடிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வருவார் என்ற நம்பிக்கை எல்லாம் எனக்கு கிடையாது.
திருமணம் பற்றி சொன்னது:
அவர் அந்த அளவிற்கு வேலையில் அர்ப்பணிப்பாக இருப்பார். அதனால் எந்த பிரச்சினையாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்வேன். பின் ஏதாவது எங்களுக்குள் சண்டை வந்தால் நான் நேரடியாக மணியிடமே பேசுவேன். ஆனால், எந்த காரணத்திற்காகவும் மணி என் மீது கோபப்பட மாட்டார். திருமணத்திற்கு முன்பு கூட மணி என்னிடம் காதலை சொல்லும் போது, நான் ஒரு சாதாரண பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த பெண். எனக்கு காதலில் நம்பிக்கை இல்லை. அதோடு திருமணத்திற்கு முன்பு காதல் என்ற பெயரில் சுற்ற வேண்டாம். நேரடியாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னேன். அதற்கு பிறகு தான் எங்கள் திருமணம் நடந்தது என்று கூறியிருக்கிறார்.