'நான் கமல் ஹாசனின் அண்ணன் மகள் மறக்காதீங்கா - சிரஞ்சீவி பற்றி சுஹாசினி சொன்ன விஷயம்

By ·

சமீபத்தில் கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று இருந்தது. இந்த விழாவில் திரைப்படங்கள் திரையிடல், கலந்துரையாடல்கள், விருது நிகழ்வுகள் என பல நிகழ்வுகள் நடைபெற்றிருந்தது. இந்த விழாவின் இறுதி நாளில் நடந்த கலந்துரையாடலில் நடிகை சுகாசினி கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் சிரஞ்சீவி உடன் நடித்த அனுபவத்தை குறித்து கூறியிருந்தார்.

அதில் சுஹாசினி, நான் சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் உதவி ஒளிப்பதிவாளராக தான் பணியாற்றி இருந்தேன். நடிப்பிற்காக நான் எந்த ஒரு பயிற்சியும் எடுக்கவில்லை. அதனால் எல்லாவற்றையும்
பயிற்சி எடுத்து தான் நான் படிப்படியாக கற்றுக்கொண்டேன். ஒருமுறை சிரஞ்சீவி உடைய படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

சுஹாசினி குறித்த தகவல்:

அந்த படத்தில் ஒரு காட்சிக்காக நாற்காலிக்கு பின்னால் நின்று கொண்டு எதுவும் பேசாமல் ரியாக்ஷன்களை கொடுத்துக் கொண்டிருந்தேன். பேசாமல் நடிக்கும் காட்சியை உயிர்பிக்க வேண்டும் என்பதெல்லாம் என்பது ஒரு பெரிய சவாலான விஷயம். அந்த நேரத்தில் தான் சிரஞ்சீவி என்னுடைய நடிப்பை மெருக்கேற்றுவதற்கு சில உதவி செய்தார். அந்த காட்சியில் நான் எவ்வளவு முக்கியமானவன் என்பதை அவர் எனக்கு உணர்த்தினார்.

விழாவில் சுஹாசினி:

அது என்னவென்றால் திடீரென்று என்னைப் பார்த்து சிரஞ்சீவி, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். உடனே நான், நடிக்கிறேன் என்றேன். அதற்கு சிரஞ்சீவி, நீங்கள் தான் இந்த படத்தின் ஹீரோயின். ஜூனியர் ஆர்டிஸ்ட் இல்லை என்று சொன்னார். அந்த கதாபாத்திரத்திலும் அவர் என்னை கதாநாயகி போல நடிக்க சொன்னார். நான் நடிகையாக மாறிய பிறகு சிரஞ்சீவியுடன் என்னுடைய முதல் நேரடி தெலுங்கு படத்தில் நடித்தேன்.

சிரஞ்சீவி பற்றி சொன்னது:

அப்போது சிரஞ்சீவி என்னை அதிகமாக கவனித்தார். அவர், திடீரென்று என்னை பார்க்க கூடாது சாதாரணமாக பார்த்து டயலாக் பேச வேண்டும் என்றெல்லாம் சொன்னார். அதற்கு நான் கமலஹாசனின் அண்ணன் மகள் நான். என்னை சுற்றி நடிகர்கள் இருந்த சூழலில் தான் வளர்ந்தேன். அப்படித்தான் நானும் மறந்து விடாதீர்கள் என்று சொன்னேன். இயல்பாகவே அந்த காட்சிகள் எல்லாம் நான் நடித்தேன். இறுதியில் அவரே என் நடிப்பை பார்த்து பாராட்டினார் என்று கூறுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full