ஹோம் டூர் வீடியோவால் ஏற்பட்ட சர்ச்சை - பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா அளித்த விளக்கம்

By Rajkumar · 29/7/2024

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' புகழ் நடிகை சுஜிதா சமீபத்தில் போட்ட ஹோம் டூர் வீடியோவால் ஆன சர்ச்சைக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். தென்னிந்திய சின்னத்திரையில் முன்னணி சீரியல் நடிகை ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் சுஜிதா. இவர் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் என்னும் ஊரில் பிறந்தவர். பாக்யராஜ் இயக்கிய 'முந்தானை முடிச்சு' படத்தின் மூலம்தான் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு சுஜிதா அறிமுகம் ஆனார். அதைத்தொடர்ந்து இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து சீரியல்களில் நடிக்க தொடங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான, 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் மூலம் தான் சுஜிதாவுக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் சுஜிதா தனது யூடியூப் சேனலில், ஹோம் டூர் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அந்த வீட்டில் துப்பாக்கியை வைத்திருந்ததால் ஏற்பட்ட சர்ச்சைக்கு தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சுஜிதா ஹோம் டூர்:

அதில், மருதமலை அடிவாரத்தில் என்னுடைய ஃபேமிலி பிரண்ட் வீடு இருக்கு. சமீபத்தில் நாங்க நீலகிரிக்கு சுற்றுலா போயிருந்தப்ப அவங்க வீட்டுக்கு போயிருந்தோம். எப்பவுமே டூர் போற இடங்களில் இருந்து நான் வீடியோ எடுத்து போடுவேன். அந்த வீடியோக்களுக்கும் நல்ல ரீச் கிடைக்கும். அதுபோல் அந்த நண்பர் வீட்டுக்கு போனப்போ, இயற்கை சூழ வீடு ரொம்ப அழகாக இருந்தது.

சுஜிதா விளக்கம்:

மேலும், அந்த வீட்டை ரொம்ப ரசிச்சு கட்டி இருந்தாங்க. அதனால் ஹோம் டூர் வீடியோ போடலாம் என்று என் நண்பரிடம் பர்மிஷன் கேட்டேன். அவரும் ஓகே என்று சொல்ல, வீட்டை வீடியோ எடுத்து எனது சேனலில் வெளியிட்டேன். மேலும், அந்த வீட்டில் இரண்டு 'ஏர் ரைபிள்' துப்பாக்கிகளை அவர் காட்டியிருந்தார். அவற்றை வீட்டில் வைத்திருக்க லைசன்ஸ் தேவை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதுதான் நடந்தது.

பாதுகாப்புக்காக வைத்திருப்பது:

பின் வீடியோ வெளியானதும் தேவையில்லாத கமெண்ட்கள் வருகின்றது. வனப்பகுதியில் வசிப்பதால் சும்மா ஒரு பாதுகாப்புக்காக அவங்க அதை வைத்திருக்கலாம் என்று கூட எனக்கு தோணுது. ஆனா, அதை எப்படி அவங்க வைத்திருக்கலாம் என்று விவாதங்கள் சமூக ஊடகங்களில் போகுது. வனவிலங்குகளை வேட்டையாட தான் வச்சிருக்காங்க என்று வாய்க்கு வந்ததை பேசுறாங்க. எல்லாரும் அவங்க இஷ்டத்துக்கு பேசி கருத்துக்களை வைரல் ஆக்கிட்டு இருக்காங்க.

தேவையில்லாத விவாதங்கள்:

சட்டத்துக்கு விரோதமா எந்த விஷயமும் அவங்க பண்ணல. இந்த செய்தியை கேள்விப்பட்டு அந்த நண்பரும் என்கிட்ட, எதுக்கு இப்படி எல்லாம் யோசிக்கிறாங்க என்று சொல்லி சிரித்தார். இந்த விஷயத்தை செய்தி சேனல்களும் விசாரிக்காமல் செய்தியை ஒளிபரப்புகிறார்கள். ஆனா, வனத்துறையில் இருந்து எங்களை எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை. அதனால் இவையெல்லாம் தேவையில்லாத வேலை என்று சுஜிதா குறிப்பிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full