சினிமா நடிகை, டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்த சுஜிதா இயக்குனராக அவதாரம் எடுத்து இருக்கிறார் - அதுவும் ஹன்சிகா வைத்து எடுத்து இருக்கிறார் பாருங்க.

By subhashini · 31/1/2022

தென்னிந்திய சின்னத்திரையில் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் சுஜிதா தனுஷ். இவர் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் என்னும் ஊரில் ஜூலை மாதம் 12 ஆம் தேதி 1983ல் பிறந்தார். சுஜித்தாவின் அப்பா பெயர் டி.எஸ். மணி மற்றும் அம்மா பெயர் ராதா. இவர் அண்ணனுடைய பெயர் சூரிய கிரன். இவர் சினிமா திரைப்பட இயக்குனர் ஆவார். அதுமட்டும் இல்லாமல் இவர் பல படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் மனைவி பெயர் கல்யாணி. இவர்களும் ஒரு நடிகை தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சி என்ற படத்தில் சுஜிதா குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின் நடிகையாக பல படங்களில் நடித்து இருக்கிறார்.

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். பின் சினிமா வாய்ப்பு இவர் சின்னத்திரை சீரியலில் நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் டிவியில் 30 சீரியலுக்கு மேல் நடித்து உள்ளார். தற்போது பிசியான சின்னத்திரை நடிகையாக திகழ்கிறார். இப்படி நடிகை சுஜிதா அவர்கள் தனது சிறு வயதில் இருந்தே சின்னத்திரை, வெள்ளித்திரையில் நடித்து வருகிறார். இருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் தான் சுஜிதாவுக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது என்றே சொல்லலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சுஜிதா:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் சீரியல்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியலாக வலம் வருவது பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன், தம்பிகளின் பாச கதை தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம்(அண்ணி) என்ற கதாபத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை சுஜிதா. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதால் இந்த சீரியலை தெலுங்கில் ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அதோடு தெலுங்கிலும் இவர் தான் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சுஜித்தா, தனுஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரும் கோயம்புத்தூரை சேர்ந்தவர்.

https://youtu.be/DJxlY2jlJk0

சுஜித்தா யூடியூப் சேனல்:

இவர் முதன் முதலில் போட்டோகிராபராக தான் இருந்தார். பின்னர் விளம்பர படங்கள் எடுக்கும் இயக்குனர் ஆக மாறி விட்டார். அதுமட்டும் இல்லாமல் அவருடைய சில விளம்பர படங்களில் நம்ம நடிகை சுஜித்தா நடித்து உள்ளார். மேலும், இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளார். அவருடைய பெயர் தன்வின். மேலும், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் சுஜிதா அவ்வப்போது தனது புகைப்படம் வீடியோ மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அதிலும் கதைகேளு கதைகேளு என்று தனியாக யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார் சுஜிதா.

சுஜித்தா இயக்கிய விளம்பரம்:

அதில் சிறுவர்களை கவரும விதமாக பல கதைகளை சொல்லி வருகிறார். இதன் வழியாக அவர் பதிவிடும் அனைத்து பதிவுகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் இதுவரை குழந்தை நட்சத்திரம், சினிமா நடிகை, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பார்த்த சுஜிதா தனுஷ் தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கிய 2 விளம்பர படங்கள் தொடர்பான மேக்கிங் வீடியோ தற்போது யூடியூப் தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த விளம்பரத்தில் நடிகை ஹன்சிகாவை வைத்து இயக்கியுள்ளார். அரோமா பிராடக்ட் விளம்பரத்தில் ஹன்சிகா நடித்து இருக்கிறார். அதில் பால், தயிர், நெய் போன்ற பொருட்களை விளம்பரப்படுத்தி இருக்கிறார். அது தொடர்பான மேக்கிங் வீடியோவை தற்போது சுஜிதா வெளியிட்டுள்ளார்.

https://youtu.be/1iTE0smrkQM

சுஜித்தாவுக்கு குவியும் வாழ்த்து:

மேலும், இந்த வீடியோவில் இயக்குநராக தான் செய்த பணிகள் குறித்து சுஜிதா பகிர்ந்துள்ளார். விளம்பர பட இயக்குநரான அவரது கணவர் சுஜிதாவின் இயக்குநர் ஆசையை புரிந்துகொண்டு இந்த வாய்ப்பை கொடுத்ததாகவும், இயக்குநர் பணியில் ஏதாவது தவறு செய்தால் அவர் கூடவே இருந்து அந்த தவறை சரி செய்தாகவும் கூறியுள்ளார். மேலும், ஹன்சிகாவுடன் இந்த விளம்பர படத்தில் பயணம் செய்தது மறக்க முடியாது என்று சுஜிதா கூறி உள்ளார். தற்போது மேக்கிங் வீடியோ யூடியூப் தளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் சுஜிதாவின் இயக்குனர் பயணத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதோடு இந்த வீடியோ தற்போது ட்ரெண்ட்டிங் லிஸ்டில் இருந்து வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full