சன் மியூசிக் ஹேமா சின்ஹா கணவர் இவரா.! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.!

By Rajkumar · 30/4/2019

சன் தொலைக்காட்சி நிறுவனம் ஆரம்பித்த சன் மியூசிக் தொலைக்காட்சியில் வி ஜே-கள் அறிமுகமான காலத்தில் பல்வேறு வீடியோ ஜாக்கிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தனர். அந்த வகையில் வசீகரமான தோற்றத்துடன் பல இளசுகளின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் தொகுப்பாளினி ஹேமா சின்ஹா.

சன் ம்யூசிக் ஆரம்பித்த ஆரம்ப காலகட்டம் முதல் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த இவர், ராஜு முருகன் என்ற திரைப்பட இயக்குனரை காதலித்து வந்தார். ராஜு முருகன் வேறு யாரும் இல்லை. தமிழில் தினேஷ் நடிப்பில் வெளியான 'குக்கூ' படத்தை இயக்கியவர் தான்.

அந்த படத்தை தொடர்ந்து 'ஜோக்கர் ' படத்தையும் இயக்கினார் ராஜு முருகன். ஜோக்கர்' படம் வெளியான சில நாட்களில் திருமணம் செய்யவிருப்பதாக இயக்குநர் ராஜூமுருகன் தெரிவித்திருந்தார். இதயடுத்து இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

இவ்விருவரின் திருமணம் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி பெசன்ட் நகரில் உள்ள கோயிலில் எளிமையான முறையில் நடைபெற்றது. இருவரின் நெருக்கமான நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full