யாருன்னு தெரியுதா ? ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ் பேவரைட்டா இருந்தவங்க, இப்போ எப்படி இருக்காங்க.

By Siva · 5/3/2023

ஒரு கால கட்டத்தில் fm மூலம் பாடல்களை கேட்டு கொண்டிருந்த தமிழ் ரசிகர்கள் பின்னர் தொலைக்காட்சியில் போன் செய்து தமக்கு விரும்பிய பாடல்களை கேட்கும் நிகழ்ச்சி தமக்கு காலகடத்தில் விஜே எனப்படும் வீடியோ தொகுபலளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமானர்கள். அந்த வகையில் சன் மியூசிக் துவங்கப்பட்ட முதன்முதலில் தமிழில் அறிமுகமான வீடியோ தொகுப்பாளர்கள் சிலர்களில் பிரபலமானவர் vj அனிஷா. ஒரு கால கட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த அனிஷா தற்போது எங்கு இருக்கிறார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கூட தெரியவில்லை.

இயற்பெயர் பூர்ணிமா. ஆனால் சன் மியூசிக் தொலைக்காட்சியில் இவர் வி.ஜேவாக பணியாற்றிய போது தனது பெயரை அனிசா என்று மாற்றிக் கொண்டார். ஹைத்ராபாத்தில் பிறந்த அனிஷா வளர்ந்தது மாற்றிக் சென்னையில் தான். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாளஜி படித்தார் .பின்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கி எனப்படம் நேயர்களுக்கு விருப்பமான பாடல்களை போடும் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக இருந்து வந்தார்.

இவருக்கென்று அப்போது மிகப்பெரிய கல்லூரி இளைஞர்களின் பட்டாளமே இருந்தது.சன் மியூசிக்கு பிறகு இவர் ஜெயா தொலைகட்சியில் வீடியோ தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.  சக்தி முருகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு பையனும் பெண்ணும் பிறந்தனர். திருமணத்திற்கு இவர் பிறகு சீரியல்களிலும் அனிசா நடிக்க ஆரம்பித்தார்.

சீரியல்களில் நடித்து வந்த அனிஷா 2017களில் வீட்டு பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் ஷை எக்யூப்மன்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். அது தொடர்பாக பிரசாந்த் குமார் என்பவரிடம் 101 ஏசியை மொத்தமாக 37 லட்சம் ரூபாய்க்கு பேசப்பட்டது. ஆனால் பொருள் வாங்கிய பின்னரும் பணத்தை தராமல் இழுபறி செய்த அனிஷா ஒரு கட்டத்தில் செக் ஒன்றை கொடுத்துள்ளார். ஆனால் இந்த செக் செல்லாமல் போகவே அனிஷாவிடம் சென்று கேட்டபோது அவரது கணவர் மற்றும் சில ஆட்களை வைத்து மிரட்டியுள்ளார். இதனையடுத்து போலீசில் புகார் அளிக்கவே அனிஷாவையும் அவரது கணவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அனிஷா டிராவல்ஸ் ஒன்றயும் நடத்தி வந்துள்ளார். அனிஷாவிடம் சொந்தமாக விலையுயர்ந்த சொகுசு கார்கள் கிடையாது மற்றவர்களிடம் பேசி கார்களை வாங்கியுள்ளார். சன் மியூசிக் அனிஷா என்பதினால் அவர்களும் நம்பி கொடுத்துள்ளார். ஆனால் அனிஷா கார் உரிமையாளர்களுக்கு தெரியாமல் கார் ஆவணங்களை அடகு வைத்து பணம் பெற்றதாகவும் பின்னர் அந்த நிறுவனத்தை மூடி விட்டதாகவும் கூரப்படுகிறது. மேலும் காரில் உரிமையாளர் தங்களுடைய கார் கிடைக்கவில்லை என்று 64 பேர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் கைதாவதற்கு முன்னர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்த அனிஷா தனது புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வந்தார். இந்த நிகழ்வுக்கு பின்னர் சில வருடங்களாக எந்த ஒரு பதிவையும் அனிஷா போடுவதில்லை. அதே போல இவரை பதிவையும் நிகழ்ச்சியிலும் இவரை காண முடியவில்லை. இறுதியாக இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் மாம் நிகழ்ச்சியில் தன்னுடைய மக்களுடன் கலந்துகொண்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவரது சமீபத்திய புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அதில் பப்கட் செய்து அடையாளம் தெரியாது அளவு மாறி உள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full