முதன் முறையாக தன் மகளுடன் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சன் மியூசிக் அனிஷா. இதோ அவரின் குடும்ப புகைப்படம்.

By subhashini · 26/11/2021

ஒரு கால கட்டத்தில் fm மூலம் பாடல்களை கேட்டு கொண்டிருந்த தமிழ் ரசிகர்கள் பின்னர் தொலைக்காட்சியில் போன் செய்து தமக்கு விரும்பிய பாடல்களை கேட்கும் நிகழ்ச்சி ஆரம்பித்த காலகடத்தில் விஜே எனப்படும் வீடியோ தொகுபலளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமானர்கள். அந்த வகையில் சன் மியூசிக் துவங்கப்பட்ட முதன்முதலில் தமிழில் அறிமுகமான வீடியோ தொகுப்பாளர்கள் சிலர்களில் பிரபலமானவர் vj அனிஷா. ஒரு கால கட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த அனிஷா தற்போது எங்கு இருக்கிறார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கூட தெரியவில்லை.

இயற்பெயர் பூர்ணிமா. ஆனால் சன் மியூசிக் தொலைக்காட்சியில் இவர் வி.ஜேவாக பணியாற்றிய போது தனது பெயரை அனிசா என்று மாற்றிக் கொண்டார். ஹைத்ராபாத்தில் பிறந்த அனிஷா வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான்.மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாளஜி படித்தார்.பின்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கி எனப்படம் நேயர்களுக்கு விருப்பமான பாடல்களை போடும் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக இருந்து வந்தார்.

இவருக்கென்று அப்போது மிகப்பெரிய கல்லூரி இளைஞர்களின் பட்டாளமே இருந்தது.சன் மியூசிக்கு பிறகு இவர் ஜெயா தொலைகட்சியில் வீடியோ தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.  சக்தி முருகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு பையனும் பெண்ணும் பிறந்தனர். திருமணத்திற்கு இவர் பிறகு சீரியல்களிலும் அனிசா நடிக்க ஆரம்பித்தார்.

அதே போல தனது புகைப்படங்களை அடிக்கடி சமூக பக்கத்தில் பதிவு செய்து வந்த நிஷா,சில வருடங்களாக எந்த ஒரு பதிவையும் போடுவதில்லை. அதே போல இவரை எந்த நிகழ்ச்சியிலும் இவரை காண முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் மாம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full