முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான ‘சன் டிவி’-யில் 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை ஒரு காமெடி கேம் ஷோ ஒளிபரப்பானது. அந்த காமெடி கேம் ஷோ தான் ‘சூப்பர் சேலஞ்ச்’. இந்த ‘சூப்பர் சேலஞ்ச்’ கேம் ஷோவை தொகுத்து வழங்கியவர் தான் தியா மேனன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சன் டிவிலையே ஒளிபரப்பான இன்னொரு கேம் ஷோ ‘சவாலே சமாளி’. 2017-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த ஷோவையும் தியா மேனன் தான் தொகுத்து வழங்கினார்.

2016-ஆம் ஆண்டு கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தொகுப்பாளினி தியா மேனன். திருமணத்திற்கு பின்னர் சிங்கப்பூரில் செட்டில் ஆகினாலும் தொகுப்பாளினி பணியை தொடர்ந்தார் தியா. தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் பாடல் நடனம் என்று பன்முக திறமை கொண்டவர் தியா.

Advertisement

விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்ற ‘என் ஜன்னல் வந்த காற்றே’, மற்றும் வில்லு படத்தில் இடம்பெற்ற   ‘தீம்தனக்கா தில்லானா ’போன்ற சில பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு நேர்ந்த மோசமான சம்பவம் குறித்து கூறியுள்ளார். அதில் ரயில் நிலையத்தில் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு பயங்கரமான சம்பவம் குறித்து விளக்கினார். அந்த திருட்டில் லட்சக்கணக்கில் மதிப்புள்ள நகைகள் மற்றும் பாஸ்போஸ்ர்ட் போன்ற முக்கியமான ஆவணங்களையும் இழந்துள்ளார்களாம்.

இதுகுறித்து ரயில் நிலையத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்த போதும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் மாறாக அவர்கள் தங்களை ஒரு தீண்டத்தகாதவர் போல பார்த்ததாகவும், சிசிடிவி கேமராவில் திருடனை திருடனை பிடிக்கச் சொன்ன போது போலீசார் நக்களாக சிரித்தனர் என்றும் வேதனை தெரிவித்துள்ளார் தியா.

Advertisement
Advertisement