மூணு பேருக்காக சீரியலை முடிச்சு விட்டாங்க - வருத்ததில் ‘ஆடுகளம்’ சீரியல் ஆர்ட்டிஸ்டுகள்
மூணு பேருக்காக சீரியலை முடிச்சு விட்டாங்க - வருத்ததில் ‘ஆடுகளம்’ சீரியல் ஆர்ட்டிஸ்டுகள்
சன் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகின்றன. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் டிஆர்பியில் முக்கிய இடத்தை வகித்தது. இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பானது. மேலும், இந்த சீரியலில் டெல்னா டேவிஸ் என்பவர் நாயகியாக நடித்து வந்தார். இந்த சீரியல் பூமிகா மற்றும் வருனின் காதல் கதையை மையாக கொண்டு சென்றது. இதை அடுத்து இவர் மலையாளத்திலும் சில தொடர்களில் நடித்திருக்கிறார்.
அதன் பின் இவர் தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆடுகளம் என்று தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த தொடரில் சல்மான் ஹீரோவாக நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் காயத்ரி ஜெயராமன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த சீரியல் நீதிக்காகவும் தன் சகோதரிக்காகவும் நடக்கும் போராட்டத்தில் ஹீரோயினி சத்யா என்னென்ன சோதனைகளை சந்தித்தார் என்பது தான் சீரியல் கதை.
ஆடுகளம் சீரியல்:
இப்படி இருக்கும் நிலையில் ஆடுகளம் சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் மிகப்பெரிய வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சீரியல் யூனிட்டில் அளித்த பேட்டியில், இந்த சீரியல் ஒளிபரப்பு ஆனபோதே ரொம்ப தாமதமாக தொடங்கப்பட்டது. டெல்லி கணேஷ் சார் தொடரில் கமிட் ஆகிய சில எபிசோடுகள் தான் நடித்தார். பின் அவர் இறந்து விட்டார். அவருக்கு பதில் காத்தாடி ராமமூர்த்தி கம்மிட்டானார். நடிகை சச்சு, தீபா, ராஜேந்திரன், காயத்ரி ஜெயராம், டெலினா என நட்சத்திர பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்ததார்கள்.
சீரியல் யூனிட் பேட்டி:
இந்த சீரியலை ஆரம்பத்தில் prime டைமில் ஒளிபரப்பினார்கள். ஆனால், என்ன காரணமோ என்று தெரியவில்லை திடீரென்று பகல் நேரத்துக்கு சீரியல் டைமை மாத்தி விட்டார்கள். இந்த நேரம் மாற்றமே சில ஆர்டிஸ்ட்களுக்கு அதிர்ச்சியை தந்தது. காயத்ரி ஜெயராம், டெல்னா, சல்மான் மூன்று பேருமே தொடரில் இருந்து வெளியேறுவதாக சொல்லி விட்டார்கள். சேனல்களில் இருந்து இவர்களை சமாதானம் செய்ய முயற்சியும் நடந்தும். அது பலனளிக்கவில்லை.
சீரியல் நிறுத்தம்:
முக்கியமாக மூன்று கேரக்டர்கள் சீரியலில் இருந்து விலகியதால் அவர்களுக்கு பதில் வேற நடிகர்களை கமிட் செய்தாலுமே சீரியலுக்கு ரேட்டில் கிடைக்குமா? என்ற தயக்கமும் சேனலுக்கு இருந்தது. இதனால் மொத்த சீரியலை முடிக்க சொல்லி விட்டார்கள். அடுத்த சில வாரங்களில் சீரியலுக்கு என்ட் கார்டு போடப்படும். மொத்தத்தில் மூன்று ஆர்டிஸ்டிகளுக்காக மற்ற நடிகர், டெக்னீசியன்களுக்கு பல பேருக்கு சான்ஸ் பறிபோகிறது தான் பெரிய வருத்தமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.