சஞ்சனாவை அடுத்த 'ரகிட்ட ரகிட்ட' பாடலில் இளசுகளை கவர்ந்த அன்பே வா சீரியல் நடிகை.

By Rajkumar · 24/6/2021

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'கடந்த வெள்ளிக்கிழமை ஜூன் 18 ஆம் தேதி Netflix Ott தளத்தில் வெளியாகி இருந்தது.லண்டனில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அகதிகளை அந்த நாட்டில் இருந்து விரட்ட கேங்ஸ்டர் கும்பல் ஒன்று செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு எதிராகவும் ஈழத்தமிழகர்கள் மற்றும் புலம்பெயர் மக்களுக்கு ஆதரவாக ஒரு தமிழர் போராடுகிறார்.

அவரை லண்டன் கேங்ஸ்டர் கும்பல், மதுரை தமிழரான தனுஷை வைத்து கொள்கின்றனர்.பின்னர் தனுஷ், அந்த தமிழ் போராளியின் வரலாற்றை தெரிந்து கொண்டு லண்டன் தாதாவை எதிர்த்து போராடுகிறார். பின்னர் தனுஷ் என்ன ஆனார், புலம்பெயர் தொழிலார்களுக்கு என்ன ஆனது என்பது தான் கதை. இந்த படம் மிகவும் சுமாரான விமர்சனத்தை தான் பெற்று வருகிறது.

இந்த படத்தின் அணைத்து பாடல்களும் மாபெரும் ஹிட் அடித்தது. அதிலும் குறிப்பாக 'ரகிட்ட ரகிட்டா' பாடல் மாபெரும் ஹிட் அடைந்தது. இந்த பாடலுக்கு பாபா பாஸ்கர் தான் நடனனமைத்து இருந்தார்.இந்த பாடலில் தனுஷ் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணாக வள்ளி என்ற கதாபாத்திரத்தில் கொஞ்சம் நேரம் வந்தாலும் இவரது நடனம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருந்தது.

இவரை தொடர்ந்து தற்போது இந்த பாடல் மூலம் இளசுகளை கவர்ந்து இருப்பது அவரது அருகில் ஆடிய நடிகை ஹேமா தயாள் தான். இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'அன்பே வா ' தொடரில் அஸ்வினி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே போல இவர் பாபா மாஸ்டர் நடன குழுவில் குரூப் டான்சராக பல பாடல்களில் ஆடி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full