சன் டிவியில் ஜோதிடம் சொன்ன அக்கா.! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.!

By Rajkumar · 3/5/2019

சன் தொலைக்காட்சியில் காலையில் தினமும் இவரது குரலை கேட்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. ராசியான நிறம், அனுகூலமான திசை என்று அணைத்து ராசிகளின் நேரத்தை தினமும் புட்டு புட்டு வைத்தவர் வே ஜே விஷால். தற்போது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா.

சன் டிவியில் 'ஜோதிடபலன்' நிகழ்ச்சியைப் பல வருஷங்களாகத் தொகுத்து வழங்கியவர் வீஜே விஷால். ஐ.டி வேலை பார்த்துக்கொண்டு, பகுதி நேரமாக மீடியாவில் வலம் வந்தவர். அவருடைய பணியின் காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 'ஜோதிடபலன்' நிகழ்ச்சியிலிருந்து விலகினார்.

சமீபத்தில் பிரபல பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள இவர், வேலையின் காரணமாக லண்டனில் மூன்று வருஷம் இருக்க வேண்டியதாக இருந்துச்சு. லண்டனில் இருந்து வந்ததுக்கு அப்புறம் பார்ட் டைமாக ஆங்கரிங் பண்ணலாம்னு டெஸ்ட் ஷூட் போயிருந்தேன். இப்போ வரை எந்த ரிசல்ட்டும் வரலை. மீடியா எனக்கு அதிகமாக ஃபேம் கொடுத்துச்சு. ஐ.டி கம்பெனி எனக்கான வளர்ச்சியைக் கொடுத்துச்சு. பல விஷயங்கள் கத்துக்கிட்டேன்.

எதுக்காகவும், யாருக்காகவும் என் ஐ.டி வேலையை விடக்கூடாது, விட மாட்டேன் என்பது என்னுடைய எண்ணம். இப்பவும் பல இடங்களில் என்னைப் பார்க்கிற என் ரசிகர்கள் ஆசையா விசாரிக்கிறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. பல நாளிதழ்களில் லைஃப் ஸ்டைல் பற்றி ஆர்ட்டிகிள் எழுதியிருக்கேன். இனிமேல், எழுத்தில் கவனம் செலுத்தலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்.. மறுபடியும் வேலை காரணமா லண்டன் போறேன்''என்று பேசியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full