சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி, வம்சம், மரகத வீணை போன்ற பல சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகர் ரேஷ்மா பசுபதி. இவர் தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘வேலைனு வந்துட்டா வேலைக்காரன்’ என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரைத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ரேஷ்மா பசுபதி. 

Advertisement

சென்னையை பூர்விகமாக கொண்ட இவர் தனது உயர் படிப்பை அமெரிக்காவில் பயின்றார். படிப்பை முடித்துவிட்டு விமானப் பணிப்பெண்ணாக சிறிது காலம் பணியாற்றி வந்தார். ஆனால், நடிப்பில் ஆர்வம் என்பதால் சீரியல் பக்கம் தனது கவனத்தை திருப்பினார்.

இவருடைய தந்தையும் ஒரு சில தெலுகு படங்களை தயாரித்துள்ளார். இதனால் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பும் எளிதாக கிடைத்தது.ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தியது ‘வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரம் தான். தற்போது இவரது படு கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement