கயல்-எழில் திருமணம் நடக்குமா? நடக்காதா? பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான அதிரடி ப்ரோமோ

By subhashini · 16/9/2024

கயல்-எழில் திருமணம் தொடர்பாக வெளியாகி இருக்கும் ப்ரோமோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் டாப்பில் இருப்பது கயல். தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக கொண்டு கயல் சீரியல் சென்று இருக்கிறது. சீரியலில் கடின உழைப்பாளியான ஹீரோயின் கயல் தன்னுடைய மொத்த குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார்.

கடந்த சில மாதங்களாக கயல் சீரியலில் எழிலின் திருமண ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. எழில் சிறு வயதில் இருந்தே கயலை காதலித்து வருகிறார். கயல், எழிலை நண்பராக தான் பார்க்கிறார். பின் எப்படியோ எழில் தன்னுடைய காதலை கயலிடம் சொல்கிறார். ஆனால், கயல் குடும்ப சூழ்நிலைக்காக எழிலை திருமணம் செய்து குடும்ப முடியாது என்று மறுத்தார். பின்பு ஒரு கட்டத்தில் கயலுக்கு எழில் மீது காதல் ஏற்படுகின்றது.

கயல் சீரியல்:

இருந்தாலும், கயல் அதை சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் எழிலுக்கு ஆர்த்தியை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார்கள். ஆனால், அந்த திருமணத்தில் எழிலுக்கு விருப்பம் இல்லை. கடைசியில் அந்த திருமணம் நின்றது. மேலும், ஆர்த்திக்கு எழிலின் நண்பர் ஆனந்த் தாலி காட்டி விட்டார். இதற்கு பலருமே அதிர்ச்சியாகி இருந்தார்கள். பின் எழிலை காதலிப்பதை கயல் ஒத்துக்கொள்கிறார். இருவருமே காதலிக்கிறார்கள். ஆனால், எழிலின் அம்மாவிற்கு கயலை பிடிக்கவில்லை.

சீரியல் கதை:

எழில், கயலை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருக்கிறார். அதோடு கயல்- எழில் திருமண வேலைகளும் சிறப்பாக கோலாகலமாக நடந்தது. ஆனால், கயலின் அம்மாவிற்கு விஷம் கொடுத்ததால் திருமணம் தடைபட்டது. அதற்கு பின் கயல் உடைய அம்மா குணமாகி வந்துவிட்டார். இருந்தாலுமே கயல்- எழில் இருவரும் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தற்போது மீண்டும் கயல்-எழில் திருமணத்தின் உடைய ட்ராக் தான் சென்று கொண்டிருக்கின்றது.

கயல்- எழில் திருமணம் :

அந்த வகையில் கயல்-எழில் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொடுக்கிறது. நேற்று எபிசோடில் எழில் தன்னுடைய அம்மாவிடம் தீபிகாவை காண்பித்து, இவங்க மேலே யாருக்குமே ஒரு நல்ல எண்ணம் இல்லை என்ற சொல்ல, சிவசங்கரி கயல் தான் தீபிகா பற்றி ஏதேதோ குழப்பி இருக்க வேண்டும் என்று யோசிக்கிறார். இன்னொரு பக்கம் கயல் வீட்டில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது. திருமணத்திற்காக அவருடைய பாட்டியும் வந்திருக்கிறார். மேலும், கடந்து சில வாரங்களாகவே கயல் எழில் கல்யாணம் நடக்குமா? நடக்காதா? என்ற பதற்றம் சென்று கொண்டிருக்கின்றது.

https://youtu.be/ew53faOekVU?si=uqzY7YbLVqGD1d0P

சீரியல் ப்ரோமோ:

ஒரு வழியாக பந்தக்கால் நடும் நிகழ்வை கொண்டு வந்து விட்டார்கள். இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கயலுக்கு எப்படியாவது நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும் என்று அவருடைய அம்மா பயத்தில் இருக்கிறார். இன்னொரு பக்கம் கயல் திருமணமானவுடன் வீட்டை விட்டு சென்று விடுவார் என்ற வருத்தத்தில் மூர்த்தியின் மகள் இருக்கிறாள். கயல், திருமணம் நடக்கும் என்று சொல்கிறார். கயலின் பெரியப்பாவும் தீபிகாவும் சேர்ந்து என்னென்ன செய்யப் போகிறார்கள்? இதை கயல் சமாளிப்பாரா? என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

behindtalkies AMP · Quick view
View full