90 ஸ் கிட்ஸ் பேவரைட் டாப் சுரேஷ் தற்போதைய நிலை.! இப்போ என்ன செய்கிறார்.!

By Rajkumar · 28/6/2019

90 ஸ் கிட்ஸ்களால் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளை மறக்கவே முடியாது. அந்த வகையில் வாரம் தோறும் டிப் டாப் உடை அணிந்து நாற்காலியில் அமர்ந்தபடியும், நின்றபடியும் அந்த வாரத்தில் வெளியான படங்களை விமர்சித்த அந்த நபரை 90 ஸ் கிட்ஸ் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்த டாப் 10 நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் டாப் 10 சுரேஷ். ஒரே தொகுப்பாளர் 1000 எபிஸோட்டுகளுக்கு மேல் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருவதெல்லாம் அசாத்தியமான ஒன்று. இப்போது வேண்டுமானால் பல்வேறு யூடுயூபார்கள் படங்களை விமர்சிக்கலாம். ஆனால், 90 ஸ் கிட்ஸ்களுக்கு இவர் சொல்வது தான் விமர்சனம்.

இதையும் பாருங்க : முதல்வன் 2 வில் விஜய்யா.! ஷங்கர் சொன்ன சூப்பர் தகவல்.! 

ஆரம்ப காலத்தில் இரண்டு ஆண்டுகள் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் டாப் 10 நிகழ்ச்சியை 22 வருடங்களாகத் தொகுத்து வழங்கி வருகிறார் சுரேஷ் குமார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர் டாப் 10 நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இல்லை. இருப்பினும் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

சுரேஷிற்கு திருமணம் முடிந்து கல்லூரி செல்லும் வயதில் ஒரு மகளும் இருக்கிறார். மருத்துவத்துறையிலும் டாக்டர் பட்டம் பெற்றுள்ள சுரேஷ், மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது வரும் படங்கள் எதுவுமே இவருக்கு பிடிக்கவில்லை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.  

behindtalkies AMP · Quick view
View full