நயன்தாரா விஷயத்தில் என்னால் எந்த பதிலும் சொல்ல முடியாது - இயக்குனர் சுந்தர்.சி ஓபன் டாக்

By subhashini · 24/4/2025

மூக்குத்தி அம்மன் 2 படம் தொடர்பாக எழுந்திருக்கும் சர்ச்சை குறித்து இயக்குனர் சுந்தர். சி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்த படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் அம்மனாக நயன்தாரா நடித்து இருந்தார். இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதை அடுத்து தற்போது மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் சுந்தர்.சி தான் இயக்குகிறார்.

இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, மீனா, ரெஜினா, மைனா நந்தினி, இனியா உட்பட பலர் நடிக்கிறார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய பூஜை பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருந்தது. இந்த படத்தை ஐசரி கணேஷ் தான் தயாரிக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்த செய்தி தான் பகிரப்பட்டு வருகிறது. படம் தொடங்கியதில் இருந்தே பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கின்றது.

மூக்குத்தி அம்மன் 2:

முதலில் ஆர்.ஜே பாலாஜி இந்த படத்தை இயக்குவதற்கு மிகப்பெரிய அளவில் சம்பளத்தை கேட்டிருந்தார். அது முடியாது என்பதால் தான் சுந்தர்.சி எடுக்க தொடங்கினார். இது தான் எல்லா பிரச்சனைக்கான ஆரம்ப புள்ளி. இந்த பட பூஜையில் மீனாவை நயன்தாரா அவமரியாதை செய்திருந்தார் என்றும், அங்கு இருப்பவர்கள் உடன் சரியாக முகம் கொடுத்து கூட பேசவில்லை என்றெல்லாம் கூறப்பட்டது. அதோடு இந்த படத்தின் பூஜையிலும் தனக்கு தான் முதல் மரியாதை கொடுப்பார்கள் நயன்தாரா நினைத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் நயன்தாராவிடம் பேச மீனா பலமுறை முயற்சி செய்தார். இருந்தாலுமே, அவர் கண்டு கொள்ளவே இல்லை.

நயன் செய்த வேலை:

தற்போது படத்தினுடைய சூட்டிங் தொடங்கிவிட்டது. கோயம்புத்தூர், பொள்ளாச்சி பகுதியில் தான் லொகேஷன் பார்த்தார்கள். அங்குள்ள கோயில்களில் சில காட்சிகளை எடுக்க சுந்தர்.சி திட்டமிட்டார். ஆனால், நயன்தாரா ஏகப்பட்ட பிரச்சினைகளை செய்து கொண்டிருக்கிறார். சென்னையில் தான் ஷூட்டிங் வைக்கணும், பொள்ளாச்சி எல்லாம் வேண்டாம். இத்தனை மணிக்கு தான் ஷூட்டிங் வருவேன். இந்த துணிகளை தான் போடுவேன் என்றெல்லாம் நிறைய நிபந்தனைகள் போட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

சுந்தர்.சி பேட்டி:

இதனால் சுந்தர்.சி மற்றும் நயன் இடையே வாக்குவாதம் அதிகமாகி ஷூட்டிங் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் சுந்தர்.சி, எனக்கும் நயன்தாராவிற்கும் இடையே எந்த பிரச்சனையும் கிடையாது. இந்த செய்திகள் எல்லாம் ஏன் இப்படி பரவி வருகிறது என்று புரியவில்லை. நயன்தாரா ரொம்ப டெடிகேட்டான நடிகை. படப்பிடிப்பில் ஒரு அரை மணி நேரம் கேப் இருந்தால் தான் நான் அவரை கேரவன் போக சொல்வேன்.

நயன்-சுந்தர்.சி சர்ச்சை:

நயன் லொகேஷனில் இருப்பது தான் அவருடைய வழக்கமே. இந்த மாதிரி தேவையில்லாமல் வெளியாகும் வதந்திகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார். தற்போது சுந்தர்.சி இயக்கி நடித்து இருக்கும் படம் கேங்கர்ஸ். இந்த படத்தில் வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனிஷ்காந்த், பக்ஸ் பகவதி பெருமாள், மைம் கோபி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சத்யா இசையமைத்திருக்கிறார். வெங்கட் ராகவன் இந்த படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இருக்கிறார். 15 வருடங்களுக்கு பிறகு சுந்தர்.சி-வடிவேலு கூட்டணியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full