பல வருடங்களுக்கு பின் இணையும் சுந்தர் சி, வடிவேலு கூட்டணி- என்ன படம் தெரியுமா? உற்சாகத்தில் ரசிகர்கள்
மோதலுக்கு பின் வடிவேலு- சுந்தர் சி கூட்டணி இணைய இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வந்து நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சுந்தர்.சி. இவர் இயக்கி நடித்த படங்கள் பெரும்பாலானவை காமெடி படங்களாக தான் இருக்கும். அதோடு இவருடைய படத்திற்கு காமெடிக்கு பஞ்சம் இல்லை என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு ஒரு மொத்த காமெடி பேக்கேஜ் காம்போவாக கொடுப்பார்.
இவர் முதன் முதலில் கவுண்டமணியுடன் இணைந்து தான் பணிபுரிந்தார். அந்த படங்கள் எல்லாம் மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருந்தது. அதற்குப் பிறகு வடிவேலு உடன் கூட்டணி வைத்தார். இவர்களுடைய கூட்டணியில் வந்த படங்கள் எல்லாம் நன்றாக இருந்தது. திடீரென்று இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில சர்ச்சையால் பிரிந்து விட்டார்கள். அதற்கு பிறகு தான் சுந்தர் சி அவர்கள் விவேக் மற்றும் சந்தானத்துடன் இணைந்து பணியாற்றி வந்தார்.
சுந்தர் சி-வடிவேலு சண்டை:
அதுமட்டுமில்லாமல் இவர் சந்தானத்துடன் இணைந்து பணியாற்றி இருந்ததை வடிவேல் இடம் சொல்லவில்லை என்றும் இந்த காரணத்தினால் தான் சுந்தர் சி வடிவேலு இடையே பிரச்சனை ஏற்பட்டது என்றும் கூறப்பட்டது. அதற்கு ஏற்ப சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சுந்தர் சி, தலைநகரம் படம் மொத்தமே 2 மணி நேரம் தான். ஆனால், அதில் 45 நிமிடம் காமெடி காட்சிகள் வரும். அது நன்றாக இருந்ததால் தான் மற்ற காட்சிகளை சுருக்க வேண்டியதாக இருந்தது. ஆனால், தற்போது தலைநகரம் 2 படத்தில் காமெடி இருந்தா நல்லா இருக்காது என்று நினைத்து அதை வைக்கவில்லை.
சுந்தர் சி- வடிவேலு கூட்டணி:
அந்த படம் சரியாக போகாததற்கு காரணம் வடிவேல் உடைய காமெடி காட்சிகள் என்று மறைமுகமாக சுந்தர் சி கூறியிருந்தார். இருந்தாலும், உண்மையாக இவர்கள் இருவருக்கும் மத்தியில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஆனால், இவர்களுடைய கூட்டணியில் படங்கள் வெளியாகாமல் தான் இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் சுந்தர் சி- வடிவேலு கூட்டணியில் படம் உருவாக இருக்கும் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
சுந்தர் சி திரைப்பயணம்:
சண்டையை எல்லாம் ஒரு பக்கம் தள்ளி வைத்துவிட்டு இருவரும் இணைந்து இருக்கிறார்கள். அரண்மனை 4க்கு பிறகு சுந்தர் சி இயக்கும் படத்தில் அவரே ஹீரோவாக நடிக்கிறார். அந்த படத்தில் தான் வடிவேலு கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். மேலும், 1995-ஆம் ஆண்டு வெளி வந்த ‘முறை மாமன்’ என்ற படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.
சுந்தர் சி படங்கள்:
இதனைத் தொடர்ந்து இவர் அடுத்தடுத்து தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தார். பின் இவர் தமிழ் திரையுலகில் இயக்குநர் என்பதுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். இவர் நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அவர் தானே இயக்கி நடித்தும் வருகிறார். அந்த வகையில் இறுதியாக சுந்தர் சி 'அரண்மனை 4' என்ற படத்தை இயக்கி நடித்து இருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூலையும் செய்து இருந்தது.