கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்தேன் - திடீரென இயக்குனர் சுந்தர்.சி வெளியிட்ட அறிக்கை, அதிருப்தியில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் 80 காலகட்டம் துவங்கி தற்போது வரை ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். இவர் தன்னுடைய திரை பயணத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்கள்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து ரஜினி அவர்கள் தன்னுடைய அடுத்த அடுத்த படங்களில் பிசியாக இருக்கிறார். அந்த வகையில் ரஜினிகாந்துடைய 173 வது படத்தை இயக்குனர் சுந்தர்.சி தான் இயக்குகிறார் என்றும் கமலஹாசன் தான் அந்த படத்தை தயாரிக்கிறார்கள் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி வெளியானது.
தலைவர் 173 படம்:
ரஜினியின் சூப்பர் ஹிட் ஆன அருணாச்சலம் படத்தை சுந்தர் சி தான் இயக்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சுந்தர் சி- ரஜினி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்திருந்தது. கோலிவுட் வட்டாரத்தில் இதைப் பற்றி எல்லாம் நிறைய செய்திகள் வந்தது. மேலும், இது தொடர்பாக ரஜினி- கமல்- சுந்தர் சி மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது.
சுந்தர் சி பதிவு:
இப்படி இருக்கும் நிலையில் ரஜினியின் 'தலைவர் 173 'படத்தில் இருந்து சுந்தர் சி விலகிருக்கும் செய்தி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக சுந்தர் சி வெளியிட்ட அறிவிப்பில், தவிர்க்க முடியாத காரணங்களால் ரஜினி உடைய தலைவர் 173 படத்தில் இருந்து நான் விலகுகிறேன். கனத்தை இதயத்துடன் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். கமல் தயாரிப்பில் ரஜினி சாரை வைத்து இயக்குவது என்பது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய கனவு. ஆனால், சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கையில் துரதிஷ்டவசமாக நாம் எதிர்பார்த்த எல்லாமே நடந்து விடுவதில்லை.
சுந்தர் சி.விலகல்:
கடந்த சில நாட்களாக இந்த படம் குறித்து நாங்கள் மூவரும் பேசிக்கொண்டதை எல்லாம் என் வாழ்வில் மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவம். அதில் பல பாடங்களை நான் கற்றுக் கொண்டேன். என் சினிமா வாழ்வில் அடுத்தடுத்த கட்டத்திற்கு அவையெல்லாம் உறுதுணையாக இருக்கும். இருந்தாலுமே தலைவர் படத்திலிருந்து நான் விலகுவது ரொம்ப கஷ்டமான முடிவுதான். இந்த முடிவு கட்டாயம் ஏற்பட்டது. இந்த மிகப்பெரிய வாய்ப்பு அளித்த அன்பிற்கும் நன்றி. அதோட என்னுடைய மதிப்பையும் அனைவரிடம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.