கோலாகலமாக நடந்த குஷ்பூ மகள் திருமணம் - கோவாவிற்கு யார் வந்தார்கள் தெரியுமா?

கோலாகலமாக நடந்த குஷ்பூ மகள் திருமணம்

By subhashini · 25/6/2026

கடந்த சில தினங்களாக குஷ்பூ மகளின் திருமணம் பற்றிய செய்தி தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை குஷ்பூ. இவர் நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சினிமா திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார். பின் ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பின்னர் இவர் 90களில் உள்ள தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து இருந்தார்.

அதோடு சினிமா உலகில் 90 களின் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்து உள்ளார். தற்போது குஷ்பூ படங்களில் குணச்சித்திர வேடங்களிலும்,சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் குஷ்பூ அவர்கள் இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குஷ்பு மற்றும் சுந்தர் சி தம்பதியருக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகளும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் குஷ்புவை போல மிகவும் குயூடாக பப்லியான தோற்றத்தில் தான் இருந்தார்கள்.

குஷ்பூ குறித்த தகவல்:

இதனால் இவர்கள் உருவத்தை வைத்து பல முறை பலரும் கேலி கிண்டல்கள் செய்து இருந்தார்கள். பின் குஷ்பூ மகள்கள் உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறி இருந்தார்கள். குஷ்புவின் மகள் அவந்திகா லண்டனில் நடிப்பு பயிற்சி பெற்றார். இவருக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம். இவர் தற்போது சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார். இவர் அட்டாக்கர் என்ற படத்தில் நடிக்கிறார். இதில் தனுஷினுடைய அக்கா மகன் பவிஸ் தான் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தினுடைய படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்புதான் தொடங்கியது.

குஷ்பூ- சுந்தர் சி மகள் காதல்:

இது ஒரு பக்கம் இருக்க, குஷ்பூ- சுந்தர் சி மகளுடைய திருமண செய்தி தான் தற்போது ஹாட் டாபிக்கே. அதாவது, குஷ்பூ மகள் அவந்திக்காவிற்கு தான் கல்யாணம். இவரின் கல்யாணம் கோவாவில் நடக்கிறது. அவந்திகாவை திருமணம் செய்து கொண்டவர் ஷ்ரவன் சீனிவாசன். இவர் கப்பலில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார். இது முழுக்க முழுக்க காதல் திருமணம். பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் விஜய் என முக்கியமான பிரபலங்களுக்கு மட்டும் நேரில் சென்று அழைப்பு கொடுத்து இருந்தார்கள்.

குஷ்பூ மகள் திருமணம்:

இந்நிலையில் இன்று குஷ்பூ மகளின் திருமணம் கோவாவில் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் திரையுலகை சேர்ந்த ராதிகா, சுகாசினி, பூர்ணிமா, திரிசா, சுஜாதா விஜயகுமார், நடன இயக்குனர் பிருந்தா, நாகார்ஜுனா, வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார்கள். கூடிய விரைவிலேயே குஷ்பூ மகளுடைய திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full