என்னதான் ஹிட் கொடுத்தாலும் என் பெயர் அந்த பட்டியல்ல வராது - சுந்தர்.சி ஆதங்கம்

By subhashini · 18/1/2025

'மத கஜ ராஜா' படத்தின் வெற்றி விழாவில் எமோஷனலாக சுந்தர் சி பேசி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தான் மதகஜராஜா. இந்த படத்தில் விஷாலுடன் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மணிவண்ணன், மனோ பாலா, மயில்சாமி, சிட்டிபாபு உட்பட பலர் நடித்து இருந்தார்கள். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.

இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படம் 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுவதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனை ஏற்பட்டதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. சமீபத்தில் தான் இப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா படம் வெளியாக இருப்பதாக அறிவித்திருந்தார்கள். சோசியல் மீடியாவிலும் இப்படம் குறித்து அதிகமாக பேசப்பட்டு வந்தது.

மதகஜராஜா படம்:

அதன் பின் இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்று இருந்தது. அப்போது விஷால் மேடை ஏறி பேசிய போது அவருடைய கை, கால்கள் நடுங்கி இருந்தது. குரலிலும் நடுக்கம் தெரிந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் விஷாலுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி ஆயிட்டாரு? என்று கேட்டு இருந்தார்கள். பின், விஷாலுக்கு சாதாரண வைரல் காய்ச்சல் தான் என்று அவர் தரப்பில் கூறி இருந்தார்கள்.

படம் குறித்த தகவல்:

தற்போது விஷால் நன்றாக இருக்கிறார். மேலும், பொங்கலை முன்னிட்டு இப்படம் கடந்த 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. மற்ற பொங்கல் ரிலீஸ் படங்களை காட்டிலும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் இப்படம் பெற்றுள்ளது. அனைத்து தரப்பினரிடம் இருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த படம் முதல் நாளில் 3 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 3 கோடி ரூபாயும், மூன்றாவது நாளில் ரூபாய் 6 கோடியும், நான்காவது நாளில் 6.5 கோடி ரூபாய் என வசூல் வேட்டை செய்து வருகிறது.

வெற்றி விழா:

இந்த வசூல் வேட்டை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தினுடைய வெற்றி விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் இயக்குனர் சுந்தர்.சி, விஷால், விஜய் ஆண்டனி உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய சுந்தர்.சி, 13 ஆண்டுகளுக்குப் பின் இந்த படம் தியேட்டருக்கு வருகிறது. இவ்வளவு நாள் ஆட்சி என்ன பெரிதா சாதித்து விடப்போகிறது என்று நிறைய பேர் சொன்னார்கள். ஆனால், இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைப்பது ரொம்ப பெரிய விஷயம்.

https://www.youtube.com/watch?v=Qp4TwbUaAjg

சுந்தர்.சி சொன்னது:

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ரசிக்கும் படங்களையும் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான படங்களையும் கொடுத்து வரும் என்னுடைய பெயர் நல்ல இயக்குனர்கள் என பட்டியல் போட்டால் நிறைய ஹிட் கொடுத்த என்னுடைய பெயர் அதில் இருக்கவே இருக்காது. அதுதான் எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. எனக்கு அந்த பொசிஷனும் அந்த இடமும் இன்னும் கொடுக்கவில்லை. அதற்காக நான் கவலைப்படவும் மாட்டேன். விஷால் பட்ட கஷ்டம் கொஞ்சம் நெஞ்சம் இல்லை. அதை வார்த்தையில் சொல்ல முடியாது. இந்த வெற்றி விஷால் ஓட உழைப்புக்கு சமர்ப்பணம். இவ்வளவு நாளுக்கு பிறகும் இவ்வளவு வரவேற்பு கிடைத்திருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி. ரசிகர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன் என்று ரொம்ப எமோஷனலாக பேசியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full