நான் செய்த தவறால் சினிமாவும் போச்சு,வாழ்க்கையும் போச்சு - சுந்தரா டிராவல்ஸ் நடிகை கண்ணீர்.

By subhashini · 27/9/2023

நான் செய்த ஒரு தவறால் என்னுடைய வாழ்க்கையே வீணாகி விட்டது என்று சுந்தர டிராவல்ஸ் நடிகை ராதா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு முரளி, வடிவேலு, மணிவண்ணன், வினுசக்ரவர்த்தி போன்ற பலர் நடிப்பில் வெளியான ‘சுந்தரா ட்ராவல்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ராதா. சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் நடித்த இவர் பெரிய அளவில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதன் பின்னர் இவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றியடையாத காரணத்தினால் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தார். பின் நடிகை ராதா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தாயானார். திருமணமாகி சில வருடங்களில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவகாரத்து செய்துவிட்டார்கள்.

ராதா திருமண வாழ்க்கை:

முதல் கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்த ராதாவிற்கு, எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்து வரும் வசந்த ராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. வசந்தனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் நடிகை ராதா உடன் ஏற்பட்ட காதலால் வசந்தராஜன் ராதாவும் திருமணம் செய்து கொண்டனர். பின் வசந்த ராஜனை திருமணம் செய்த ராதா கடந்த ஓராண்டாக அவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

மீண்டும் கம்பேக் கொடுத்த ராதா:

இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் நடிகை ராதா தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாக கூறி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அதனை அப்போதே வாபஸ் பெற்று விட்டார். இப்படி குடும்ப பிரச்சனை காரணமாக சில வருடங்கள் நடிக்காமல் இருந்த நடிகை ராதா சமீபத்தில் தான் பைரவி என்ற சீரியலில் நடித்தார். அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா 2 சிரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

ராதா அளித்த பேட்டி:

இந்த சீரியலின் மூலம் மீண்டும் நடிகை ராதா கம்பேக் கொடுத்திருந்தார். இந்த சீரியலில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்றிருந்தது. சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிவடைந்திருந்தது. இதனை அடுத்து இவர் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகை ராதா தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், எனக்கு சின்ன வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை, கனவு எல்லாம் இருந்தது.

திருமணம் குறித்து சொன்னது:

திருமணத்திற்கு பிறகு நான் வீட்டிற்கும் குடும்பத்திற்கும் இடையில் மாட்டிக் கொண்டேன். அது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு. திருமணம் ஆனவுடன் என்னுடைய தொழிலை விட்டு விட்டேன். நான் இதை செய்திருக்க கூடாது. என் வேலையை புரிந்து கொண்ட ஒருவரை நான் கண்டுபிடித்து திருமணம் செய்திருக்க வேண்டும். உங்களைப் புரிந்து கொள்ளும் ஒருவரை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் தனியாக வாழுங்கள். அதுவே சிறந்தது. நான் என் வாழ்வின் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். இந்த தவறை செய்யாதீர்கள். ஒரு நடிகையாக இன்றைய இளம் நடிகைகளுக்கு என்னுடைய அறிவுரை இதுதான் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full