பல லட்சத்தில் சொந்தமாக வாங்கிய சுந்தரா டிராவல்ஸ் பஸ் - வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு, இவங்க தான் நடிக்க போறாங்களா
சுந்தரா ட்ராவல்ஸ் 2 படம் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் மிக பிரபலமான நடிகராக இருந்தவர் முரளி. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வரிசையில் முரளி நடிப்பில்
இயக்குனர் அசோகன் இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ‘சுந்தரா ட்ராவல்ஸ்’.
இந்த படத்தில் வடிவேலு, ராதா, வினுச்சக்ரவர்த்தி, மணிவண்ணன் உட்பட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் ஒரு ஓட்டை பஸ்ஸை வைத்து தான் முழு படமும் எடுக்கப்பட்டு இருந்தது. அதிலும் இந்த படத்தில் வந்த எலி கூட இந்த படத்திற்கு ஒரு முக்கிய பங்கை கொடுத்தது. இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பக்க பலமே காமெடிகள் தான். ஒவ்வொரு காமெடியுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
சுந்தரா டிராவல்ஸ் படம்:
மேலும், மலையாளத்தில் வெளியான ஈ பறக்கும் தளிகா என்ற படத்தினுடைய ரீமேக் தான் சுந்தரா டிராவல்ஸ். இந்த படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு தான் இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில ஆண்டுகளாக சுந்தரா டிராவல்ஸ் படத்தின் உடைய இரண்டாம் பாகம் வர இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அது தொடர்பாக எந்த தகவலும் வெளிவரவில்லை. இப்படி இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தினுடைய இரண்டாம் பாகம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
சுந்தரா டிராவல்ஸ் 2:
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வெளியாகியிருக்கிறது. சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட் என்று இந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தை மலையாள இயக்குனர் தான் இயக்கியிருந்தார். தற்போது இரண்டாம் பாகத்தை இயக்குனர் கருப்பு தங்கம் என்பவர் இயக்குகிறார். முதல் பாகத்தில் மறைந்த நடிகர் முரளியும், வடிவேலுமே இணைந்து காமெடியில் கொடிகட்டி பறந்து இருப்பார்கள். இரண்டாம் பாகத்தில் கருணாஸ், கருணாகரனும் முன்னணி கதாபாத்திரங்களில் களமிறங்கி இருக்கிறார்கள்.
படம் குறித்த தகவல்:
இந்த படத்திற்கு செல்வா ஒளிப்பதிவு செய்கிறார். அதோடு முதல் பாகத்தில் இருந்த தொழில்நுட்ப கலைஞர்களே இரண்டாம் பகுதியிலும் பணியாற்ற இருக்கிறார்கள். கொடைக்கானல், பன்றிமலை போன்ற பகுதிகளில் உள்ள வனப்பகுதியிலும், தென்காசி, காரைக்குடி, சென்னை போன்ற பகுதியில் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் குறித்து இயக்குனர் கருப்பு தங்கம் அளித்த பேட்டியில், ஒரு பஸ் தான் இந்த கதையில் ஹீரோ.
இயக்குனர் பேட்டி:
அதை மையப்படுத்தி தான் அனைத்து கதாபாத்திரங்களிலும் உருவாக்கி இருக்கிறோம். முக்கிய கதாபாத்திரத்தில் வரும் அந்த பஸ்ஸை பல லட்சம் ரூபாயில் சொந்தமாக வாங்கி அதை படத்திற்கு ஏற்ப தயார்படுத்தி படப்பிடிப்பை நடத்தி வருகிறோம் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவல் தான் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. அதோடு பலருமே சுந்தரா ட்ராவல்ஸ் 2 படத்துக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.