மீண்டும் மீண்டுமா? கடந்த சில நாட்களுக்கு முன் நடு ரோட்டில் சண்டை, இன்று நபரின் மண்டை - சுந்தரா ட்ராவல்ஸ் நடிகையின் அட்ராஸிடி.

By Arun · 30/4/2024

பிட்காயின் விவரம் தொடர்பாக சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா மீது போலீசில் புகார் அளித்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழில் சினிமாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு முரளி, வடிவேலு, மணிவண்ணன், வினுசக்ரவர்த்தி போன்ற பலர் நடிப்பில் வெளியான ‘சுந்தரா ட்ராவல்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதா. சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், அதன் பின்னர் ராதா நடித்த படங்கள் பெரிதாக வெற்றியடையாத காரணத்தினால் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தார்.

நடிகை ராதா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தாயானார். திருமணமாகி சில வருடங்களில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து செய்துவிட்டார். முதல் கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்துள்ள ராதாவிற்கு, எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்து வரும் வசந்த ராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. வசந்தனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் நடிகை ராதா உடன் ஏற்பட்ட காதலால் வசந்தராஜன் ராதாவும் திருமணம் செய்து கொண்டனர்.

நடிகை ராதா குறித்த தகவல்:

வசந்த ராஜனை திருமணம் செய்த ராதா கடந்த ஓராண்டாக அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு நடிகை ராதாவை தன்னுடைய இரண்டாவது கணவர் தன்னை அடித்து கொடுமை படுத்துவதாகவும் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாகவும் கூறி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து அதனை அப்போதே வாபஸ் பெற்று விட்டார். இப்படி சில வருடங்கள் நடிக்காமல் இருந்த நடிகை ராதா பைரவி என்ற சீரியலில் நடித்தார்.

https://www.youtube.com/watch?v=wX7lKYGt9OI

ராதா மீது புகார்:

அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பாரதி கண்ணம்மா 2 சிரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும், திருமண வாழ்க்கை சரியாக அமையாததால் நடிகை ராதா தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ராதா மீது முரளி கிருஷ்ணன் என்பவர் கொடுத்திருக்கும் புகார் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. அதாவது, சென்னை நெற்குன்றம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன். இவரை நடிகை ராதா தாக்கி இருப்பதாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

முரளி கிருஷ்ணன் கொடுத்த புகார்:

அந்த புகாரில், முரளி கிருஷ்ணன் என்ற நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை ராதாவை எனக்கு ஏற்கனவே தெரியும். ஒரு நாள் என்னுடைய நண்பர் துவாரகேஷியை நடிகை ராதா மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். அப்போது பிட்காயினில் முதலீடு செய்வது குறித்து என்னுடைய நண்பர் ராதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்படி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 90 ஆயிரம் ரூபாய் நடிகை ராதா பிட்காயினில் முதலீடு செய்தார். ஆனால், இதுவரை அசல் மற்றும் இலாப தொகையை என்னுடைய நண்பர் திரும்ப கொடுக்கவில்லை.

https://www.youtube.com/watch?v=I_eDcJomwGk

ராதா செய்த செயல்:

பின் ராதா என்னிடம் பணத்தை கேட்டார். ஒரு நாள் டிராவல்ஸ் அலுவலகத்துக்கு வந்த ராதா மற்றும் அவருடைய குடும்பத்தினர் பணம் கேட்டு வாக்குவாதம் செய்தார்கள். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி நடிகை ராதா தரப்பில் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் என்னுடைய தலையில் காயம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு நான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தேன். இது அடுத்து நான் நடிகை ராதா மற்றும் அவருடைய குடும்பத்தின் மீது போலீசில் புகார் கொடுத்திருக்கிறேன். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று கூறி இருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் ராதா, நடு ரோட்டில் இளைஞர் ஒருவரை நடு ரோட்டில் தாக்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full