மனைவியின் வளைகாப்பில் குத்தாட்டம் போட்ட விஜய் டிவி சீரியல் நடிகர் வினோத் பாபு.

By Rajkumar · 11/8/2021

தனது மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் செம குத்தாட்டம் போட்டுள்ளார் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் நடிகர் வினோத் பாபு. விஜய் தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் தான் சுந்தரி நீயும் சுந்தரன் நானும். இந்த தொடர் முழுக்க முழுக்க காதல், குடும்பம், அரசியல் ஆகிய பின்னணியில் உருவாகி இருந்தது.

https://www.youtube.com/watch?v=ktlN_lTYQfo

இந்த தொடரை அப்துல் கபீஸ் என்பவர் இயக்கி இருந்தார். மேலும், இந்த தொடரில் முன்னணி நடிகர்களாக வினோத் பாபு மற்றும் தேஜஸ்வினிநடித்தனர். ஆனால், இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இந்த சீரியலில் ஹீரோவாக நடித்த வினோத் பாபு ஆரம்பத்தில் ஒரு நடன கலைஞ்சராக இருந்தவர்.

அதன் பின்னர் காமெடி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராகவும் திகழ்ந்து வந்தார். ஆனால், இவர் பிரபலமானது என்னவோ சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் மூலம் தான். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இவருக்கு திடீர் திருமணம் நடந்த நிலையில் தற்போது இவரது மனைவி கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற இவரது மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் மகிழ்ச்சியில் மேடையிலேயே குத்தாட்டம் போட்டுள்ளார் வினோத் பாபு.

தற்போது வினோத் பாபு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். மேலும், விஜய் டிவியில் புதிதாக துவங்க உள்ள 'தென்றல் வந்து என்னைத் தொடும்' என்ற சீரியலில் ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்தில் இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full