திருமகளை மணமமுடிக்கும் சுந்தரி சீரியல் நடிகர் - அதுவும் காதல் திருமணமாம். எந்த நடிகை தெரியுமா?

By subhashini · 14/11/2023

சின்னத்திரையில் மீண்டும் ஒரு காதல் ஜோடி திருமணம் செய்ய இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை தொடர்கள் விளங்குகிறது. சமீப காலமாகவே புதுப்புது வித்தியாசமான கதைகளத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். சீரியல்கள் மட்டுமில்லாமல் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்கள்.

மேலும், சமீப காலமாகவே சின்னத்திரையில் சேர்ந்து நடிக்கும் நடிகர்- நடிகைகள் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள். அந்த வகையில் ஷபானா- ஆரியன், மதன்- ரேஷ்மா, ஸ்ரேயா- சித்து போன்ற பல பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இந்த வரிசையில் அரவிஷ் - ஹரிகா இணைந்து இருக்கிறார்கள்.

சன் டிவியில் ஒளிபரப்பான மிகப் பிரபலமான தொடர்களில் ஒன்று தென்றல். இந்த தொடரின் மூலம் அரவிஷ் சின்ன திரையில் அறிமுகமானவர். இதனை அடுத்து இவர் சன் டிவியில் மிகப் பிரபலமான தொடராக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சுந்தரி தொடரில் ஹீரோவுக்கு நண்பனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சன் டிவி தொடரில் ஒளிபரப்பாகும் இலக்கியத் தொடரிலும் இவர் ஹீரோவுக்கு தம்பியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அரவிஷ் - ஹரிகா காதல்:

இந்த சீரியல்களின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் ரீல்ஸ் வீடியோக்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் படு பேமஸ். அதிலும் இவர் நடிகை ஹரிகா உடன் சேர்ந்து நிறைய ரீல்ஸ் வீடியோக்கள் செய்து இருக்கிறார்கள். இவர் ஹரிக்காவை தான் காதலிக்கிறார். ஹரிகா சன் டிவியில் ஒளிபரப்பான திருமகள் தொடரின் மூலம் கதாநாயகியாக மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டவர்.

அரவிஷ் - ஹரிகா நிச்சயதார்த்தம்:

இந்த சீரியல் மட்டும் இல்லாமல் இவர் தெலுங்கு தொடர்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் ஆந்திர மாநிலம் சேர்ந்தவர், அரவிஷ் கோயம்புத்தூரை சேர்ந்தவர். சன் டிவி தொடரின் மூலம் தான் இவர்கள் இருவருமே சந்தித்து காதலிக்க தொடங்கினார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாருமே பச்சைக்கொடி காட்டி விட்டார்கள். இப்படி இருக்கும் நிலையில் வருகிற நவம்பர் 19ஆம் தேதி இவர்களுக்கு இரு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது.

ரசிகர்கள் வாழ்த்து:

மேலும் இவர்களுடைய நிச்சயதார்த்த நிகழ்வில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் திருமணம் எப்போது என்றும் கேள்வி கேட்டு இருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full