எளிமையாக நடந்த சுந்தரி சீரியல் நடிகை ஸ்ரீ கோபிகாவின் வளைகாப்பு - குவியும் வாழ்த்துக்கள்
சன் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருந்த சுந்தரி. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. எப்படியாவது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு எண்ணற்ற பிரச்சனைகளை சமாளித்து போராடும் கதாபாத்திரம் தான் சுந்தரி. அதுமட்டுமில்லாமல் சுந்தரி கருப்பு நிறம் கொண்டவள். ஆகவே, நிறத்திற்கும் சாதனை செய்வதற்கும் சம்மந்தமில்லை என்பதை முறியடித்து போராடியவர் சுந்தரி.
அதனாலே இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சீக்கிரமாக இடம் பிடித்து விட்டது. மேலும், இந்த சீரியல் இரண்டு பாகங்கள் ஒளிபரப்பாகி இருந்தது. கடந்த ஆண்டு தான் இந்த சீரியல் முடிந்தது. மேலும், சுந்தரி சீரியலில் அணு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஸ்ரீ கோபிகா சந்திரன். இந்த சீரியல் மூலம் கோபிகா மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இது மட்டுமில்லாமல் இவர் உயிரே என்ற சீரியலும் நடித்திருந்தார்.
ஸ்ரீ கோபிகா சந்திரன் குறித்த தகவல்:
இவர் சில வருடங்களுக்கு முன்பு ஓவியா நடிப்பில் வெளியாகியிருந்த 90 எம்எல் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு இவர் பல படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்தார். இருந்தாலும் இவருக்கு சினிமாவில் சரியான வரவேற்புகள் கிடைக்கவில்லை. இதனால் இவர் சின்னத்திரை சீரியல் பக்கம் வந்து விட்டார். பின் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த அன்பே வா சீரியலில் ஹீரோயினாக நடித்து இருந்தார்.
ஸ்ரீ கோபிகா திருமணம்:
மேலும், ஸ்ரீ கோபிகா சந்திரன் எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். கடந்த ஆண்டு நடிகை ஸ்ரீ கோபிகாவுக்கு திருமணம் நடைபெற்றது. இது முழுக்க முழுக்க பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம். இவர் வருண்தேவ் என்பவரை தான் திருமணம் செய்தார். குருவாயூர் கோவிலில் இவர்களுடைய திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது.
https://www.youtube.com/shorts/9cCDmP8h1Ak
ஸ்ரீ கோபிகா வளைகாப்பு:
குடும்ப உறவினர்கள், நண்பர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்து இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகை ஸ்ரீ கோபிகா வளைகாப்பு குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தற்போது ஸ்ரீ கோபிகா அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார். இவருக்கு எளிமையாக வளைகாப்பு செய்து இருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.