சத்தமில்லாமல் சிம்பிளாக நடந்த சுந்தரி சீரியல் நடிகை திருமணம், மாப்பிளை யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

By subhashini · 9/10/2024

சத்தமில்லாமல் சுந்தரி சீரியல் நடிகைக்கு திருமணம் ஆகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருப்பது சுந்தரி. இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. எப்படியாவது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு எண்ணற்ற பிரச்சனைகளை சமாளித்து போராடும் கதாபாத்திரம் தான் சுந்தரி.

அதுமட்டுமில்லாமல் சுந்தரி கருப்பு நிறம் கொண்டவள். ஆகவே, நிறத்திற்கும் சாதனை செய்வதற்கும் சம்மந்தமில்லை என்பதை முறியடித்து போராடி வருகிறார் சுந்தரி. அதனாலே இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சீக்கிரமாக இடம் பிடித்து விட்டது. மேலும், இந்த சீரியலின் முதல் பாகத்தை முடித்துவிட்டு இரண்டாம் பாகத்தை தொடங்கி இருக்கிறார்கள். அதில் சுந்தரி கலெக்டராக இருக்கிறார். இந்த இரண்டாம் பாகத்தில் தெய்வமகள் சீரியல் நடிகர் கிருஷ்ணா நடிக்கிறார்.

சுந்தரி சீரியல்:

தற்போது இரண்டாம் பாகமும் விறுவிறுப்பாக செல்கிறது. மேலும், சுந்தரி சீரியலில் அணு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஸ்ரீ கோபிகா சந்திரன். இந்த சீரியல் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இது மட்டுமில்லாமல் இவர் உயிரே என்ற சீரியலும் நடித்திருந்தார். இவர் சில வருடங்களுக்கு முன்பு ஓவியா நடிப்பில் வெளியாகியிருந்த 90 எம்எல் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஸ்ரீ கோபிகா சந்திரன் குறித்த தகவல்:

அதற்குப் பிறகு இவர் பல படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்தார். இருந்தாலும் இவருக்கு சினிமாவில் சரியான வரவேற்புகள் கிடைக்கவில்லை. இதனால் இவர் சின்னத்திரை சீரியல் பக்கம் வந்து விட்டார். பின் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி சில மாதங்களுக்கு முன் முடிந்த அன்பே வா சீரியலில் ஹீரோயினாக நடித்து இருந்தார். இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு ஓளிபரப்பாகி இருந்தது. இதற்கு பின் கோபிகா வேறு எந்த தொடரிலும் நடிக்கவில்லை.

ஸ்ரீ கோபிகா குறித்த தகவல்:

மேலும், ஸ்ரீ கோபிகா சந்திரன் எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். சமீபத்தில் நடிகை ஸ்ரீ கோபிகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தது. இவர்களுடைய நிச்சயதார்த்த போட்டோஷூட் புகைப்படம் எல்லாம் இணையத்தில் வைரலலாகி இருந்தது. இந்த நிலையில் நடிகை ஸ்ரீ கோபிகாவுக்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=BDWmnADISc8

ஸ்ரீ கோபிகா திருமணம்:

இது முழுக்க முழுக்க பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம். இவர் வருண்தேவ் என்பவரை தான் திருமணம் செய்து இருக்கிறார். குருவாயூர் கோவிலில் இவர்களுடைய திருமணம் எளிமையாக நடந்து முடிந்திருக்கிறது. குடும்ப உறவினர்கள், நண்பர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்து இருக்கிறார்கள். தற்போது இவர்களுடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full