வீட்டிலேயே எளிமையாக நிச்சயதார்த்தம் செய்த சுந்தரி சீரியல் நடிகர் - பொண்ணு யார் தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்
சுந்தரி சீரியல் நடிகருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். அதிலும் தமிழ் டிவி சேனல் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு வரை சீரியல்கள் வரிசை கட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் சுந்தரி. இந்த சீரியல் மூலம் கதாநாயகி கேப்ரில்லா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார். இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. எப்படியாவது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு எண்ணற்ற பிரச்சனைகளை சமாளித்து போராடும் கதாபாத்திரம் தான் சுந்தரி.
சுந்தரி:
அதுமட்டுமில்லாமல் சுந்தரி கருப்பு நிற உடையவள். ஆகவே, சுந்தரி சாதனை செய்வதற்கும் சம்பந்தமில்லை என்பதை முறியடித்து போராடி வருகிறார் சுந்தரி. அதனாலே, இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சீக்கிரமாக இடம் பிடித்து விட்டது. இந்த சீரியலின் முதல் பாகத்தை முடித்துவிட்டு இரண்டாம் பாகம் ஒளிபரப்பி இருந்தார்கள். இந்தத் தொடரில் கேப்ரில்லா, கிருஷ்ணா, ஜிஷ்ணு மேனன், ஸ்ரீ கோபிகா, பேபி அஹானா, லிதன்யா சபாலன் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்
சீரியல் குறித்த தகவல்:
கன்னட மொழியில் துவங்கப்பட்ட சுந்தரி என்ற தொடரின், தமிழாக்கம் ஆகவே அதே பெயரில் கடந்த 2021 ஆம் ஆண்டு சன் டிவியில் சுந்தரி துவங்கப்பட்டது. இந்த தொடர் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியால் இரண்டாம் பாகம் ஒளிபரப்பானது. சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிந்தது. மேலும், இந்த சீரியலில் ஹீரோ- வில்லனாக நடித்து கலக்கியிருந்தவர் ஜிஷ்ணு மேனன். இந்த சீரியலின் மூலம் தான் இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் என்று சொல்லலாம்.
ஜிஷ்ணு மேனன் குறித்த தகவல்:
இவர் கேரளாவை சேர்ந்தவர். தற்போது ஜிஷ்ணு அவர்கள் சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் தொடரில் ஹீரோவாக கமிட்டாகி இருக்கிறார். அதில் அவருக்கு ஜோடியாக ரேஷ்மா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த தொடர் குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ஜிஷ்ணு மேனனுக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கும் தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, இவர் செலிபிரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அபியாதிராவை தான் திருமணம் செய்ய இருக்கிறார்.
ஜிஷ்ணு மேனன் நிச்சயதார்த்தம்:
இவர் பல சின்னத்திரை செலிபரிடிகளுக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக பணிபுரிந்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் மேக்கப் தொடர்பான வகுப்புகளையும் அபியாதிரா எடுத்துக் கொண்டு வருகிறார். சொல்லப்போனால், சுந்தரி தொடரில் ஜிஷ்ணுவிற்கு இவர் தான் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்திருக்கிறார். இதனால் இவர்கள் சில வருடங்களாக காதலித்து வந்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் எளிமையாக வீட்டிலேயே இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.