புத்தாண்டு தினத்தில் கணவர் பற்றி உருக்கமானபதிவு - சுந்தரி கேபிக்கு குவியும் வாழ்த்துக்கள்

By Manikandan · 2/1/2023

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா சீரியல் ஆயீஷா கூட டிக் டாக் மூலம் பிரபலமடைந்து பின்னர் சின்னத்திரையில் நுழைந்தவர் தான். அவ்வளவு ஏன் தற்போது விஜய் தொலைக்காட்சியில் பட்டையை கிளப்பி கொண்டு இருக்கும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றுள்ள சக்தி கூட டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர் தான்.அந்த வகையில் டிக் டாக்கில் இருந்து சின்னத்திரைக்கு கால் பதித்துள்ளார் கேப்ரில்லா.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பலருக்கும் பரிட்சயமானவர் கேப்ரில்லா. தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சுந்தரி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இவருக்கு திருமணமானதே தெரிய வந்த நிலையில் தற்போது கேப்ரில்லா தன்னுடைய கணவரை பற்றியும் இந்த வருட ஆசையை பற்றியும் ஒரு பதிவில் கூறியிருக்கிறார் நடிகை கேப்ரில்லா.

வீட்டை விட்டு ஓடிவந்து விட்டேன் :

கேப்ரில்லா திருச்சியை சேர்ந்தவர் அங்கேதான் தன்னுடைய படிப்பை முடித்துள்ளார். படிப்பு சரியாக வரவில்லை என்பதினால் நடிப்பிற்கு செல்ல முடிவெடுத்துள்ளார். அதன் படி தன்னுடைய 12 ஆம் வகுப்பு முடிந்து சில காலங்களுக்கு பிறகு யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு ஓடி வந்துள்ளார். ஓடி வரும் போது தன்னுடைய கழுத்தில் இருந்த ஒரு தங்க செயினை அடகு வைத்து சென்னைக்கு வந்துள்ளார். இவர் வீட்டை விட்டு வெளியில் வரும்போது தான் கண்டிப்பாக சாதிப்போம் என்ற வைராக்கியம் இருந்தாலும் ஊரில் இருக்கும் தன்னுடைய குடும்பத்தை பற்றி பயப்பட்டிருக்கிறார்.

சுருளி அறிமுகம் :

ஏனென்றால் அவரின் ஊர் கிராமம் என்பதினால் ஒருவருக்கு தெரிந்தால் ஊருக்கே தெரியும் என்று பயப்பட்டுள்ளார். இவர் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு கேப்ரில்லாவை பற்றி அவர்களது ஊரில் தவறாக பேசியுள்ளாராம் ஆனாலும் அந்த நேரத்திற்கு அவருடைய அம்மா அப்பாதான் ஆறுதல் கூறி இருக்கின்றனர். பின்னர் வாய்ப்பு தேடி அலைந்து பின்னர் ஹார்ட் பிலிம் என்ற படக்குழுவில் நடித்து வரும் போதுதான் இவருடைய கணவர் சுருளி அறிமுகமாகி இருக்கிறார்.

ஆதரவாக இருக்கும் கணவர் :

இவருடைய கணவர் சுருளி கேப்ரில்லாவின் கனவை நினைவாக்குவதில் அவருக்கு உறுதுணையாக இருந்து வந்திருக்கிறார். பின்னர் தான் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டு இருவரும் பிற மதங்களை சேர்ந்தவர்கள் என்றாலும் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் கேப்ரில்லா பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தை பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ கடுமையான விமர்சனத்திற்குள்ளாகிய நிலையில் அவரது கணவர் தான் அந்த நேரத்தில் உறுதுணையாக இருந்திருக்கிறார்.

புத்தாண்டில் கணவருக்கு வாழ்த்து :

இந்த நிலையில்தான் தன்னுடைய கணவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நோக்கில் கேப்ரில்லா அவருடைய கணவர் சுருளி கேமெராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து `ஹலோ மை டியர் ஊட்டுக்காரரே, இந்த வருடம் நான் விரும்பும் உனக்கு பெரிய மேஜிக் சினிமா பீல்டில் நடக்க என்னுடைய வாழ்த்துக்கள், புது வருடத்தில் இதுதான் என்னுடைய முதல் ஆசை என்று பதிவிட்டிருக்கிறார் கேப்ரில்லா. இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full