'என்ன இவ்ளோ கருப்பாகிட்டீங்க' 61 நாட்கள் கிராமத்தில் இருந்து சென்னை திரும்பிய மணிமகேலை - புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

By Rajkumar · 22/5/2020

சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக இருந்தவர் மணிமேகலை. பின்னர் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பானியாகவும் அறிமுகம் ஆனார். பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மணிமேகலை மக்களிடையே பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. மணிமேகலை அவர்கள் உசேன் என்பவரை காதலித்து வந்தார்.

https://www.instagram.com/p/CAfRkWXnwp8/

மேலும், பெற்றோர்களை மீறி திருமணம் செய்ததால் இன்னும் தனது பெற்றோர்கள் தங்களை ஏற்றுக்கொள்ளாததால் கொஞ்சம் கவலையில் இருக்கிறார் மணிமேகலை.இடையில் கொஞ்சம் சின்னத்திரையில் பிரேக் எடுத்துக்கொண்ட மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மிஸ்டர் அண்ட் மிர்சஸ் சின்னத்திரை ' நிகழ்ச்சியில் பங்குபெற்றார். மேலும், சமீபத்தில் நிறைவடைந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.

ஊரடங்கு உத்தரவுக்கு முன்பாகவே கிராமத்திற்க்கு சென்ற மணிமேகலை தற்போது ஊரடங்கு உத்தரவால் கிராமத்தில் ஜாலியாக இருந்துவந்தார் மணிமேகலை. அங்கே சிறுவர்களுடன் விளையாடுவது, மாடு மேய்ப்பது, கிராமத்து சமயல், பாரம்பரிய விளையாட்டு என்று படு ஜாலியாக இருந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார்.

சமீபத்தில் அரசாங்கம் விதித்திருந்த நான்காம் கட்ட ஊரடங்கில் சில பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் வெளியூரில் இருக்கும் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு வந்தனர்.அப்படி ஊரடங்கள் 61 நாட்கள் கிராமத்தில் இருந்த மணிமேகலை சென்னை வந்து சேர்ந்து விட்டதாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும், என்ன இப்படி கருப்பா ஆகிட்டிங்க என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

அதற்கு எப்போதும் போல மணிமேகலை 'கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டோம்' என்று தனது ஸ்டைலில் ஜாலியாக பதில் அளித்துள்ளார். மேலும், வில்லேஜ் வெய்யில்ல கலர் ரொம்ப டிம் ஆகிட்டிங்க போல என்று மற்றொரு ரசிகர் கேட்டதற்கு ஆம, ரொம்ப என்று பதில் அளித்துள்ளார் மணிமேகலை. அதான் சென்னை வந்துட்டார் இல்ல இனிமே கலர் ஆகிடுவாரு.

behindtalkies AMP · Quick view
View full