கிச்சனில் கதறிய சன்னி லியோன். பதறி ஓடிவந்த கணவர். வைரலாகும் வீடியோ.

By Rajkumar · 6/5/2020

உலகமெங்கும் தற்போது 'கொரோனா' எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், '144' போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

https://www.instagram.com/p/B_uHTqIDGtl/

'கொரோனா' பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. கொரோனா நிவாரண பணிகளுக்காக பல திரையுலக பிரபலங்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த லாக் டவுன் டைமில் பல திரையுலக பிரபலங்கள் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளமான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல விதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை ஷேர் செய்த வண்ணமுள்ளனர். அதில் பாட்டு பாடுவது, சமைத்து கொண்டிருப்பது, ஜிம்மில் வொர்க்கவுட் செய்வது, பாடலுக்கு நடனமாடுவது, டிக் டாக் செய்வது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் வெளியாகி வருகின்றது.

https://www.instagram.com/p/B_ubFV4DZvx/

இந்நிலையில், இந்த லாக் டவுன் டைமில் பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன் அவரது கணவரை பதற வைத்த சம்பவம் குறித்து ஒரு செய்தி வெளி வந்திருக்கிறது. பல ஆபாச படங்களில் நடித்த நடிகை சன்னி லியோன், ஹிந்தி திரையுலகில் 'ஜிசம் 2, ஜாக்பாட், ராகினி எம்.எம்.எஸ் 2, ஏக் பஹெலி லீலா, குச் குச் லோச்சா ஹை, மஸ்திசாடே, ஒன் நைட் ஸ்டாண்ட்' என பல படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது, நடிகை சன்னி லியோன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ பதிவில் நடிகை சன்னி லியோன் தனது கை விரல் கட் ஆனது போன்று கதறி நடிக்க, அவரது கணவர் டேனியல் வெப்பர் அதை உண்மை என நம்பி பதறியடித்துக் கொண்டு ஓடி வர, அதன் பின் தான் அது நடிப்பு என அவருக்கு தெரிந்திருக்கிறது. இவ்வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full