தமிழ் படத்தில் நடிக்க சன்னி லியோன் எவ்வளவு கோடி சம்பளமாக கேட்டார் தெரியு மா ? ?
பாலிவுட் நடிகை சன்னி லியோன் கனடாவை சேர்ந்தவர். முன்னர் பார்ன் எனப்படும் நீலப்படங்களில் நடித்து வந்த அவர் பாலிவுட்டில் அறிமுகமாகி தற்போது அங்கு முன்னணி நடிகையாகவும் மாறிவிட்டார்.
தற்போது தென்னிந்திய சினிமாவிலும் கால்பதிக்க முயற்சி செய்து வருகிறார். இதற்காக தமிழில் பொட்டு வடிவுடையான் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
ஆனால் இந்த படத்திற்கு அவர் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆம், அதிகம் தான், புதிய நடிகையாக வரும் அவர் முதலில் ஒரு கோடி ரூபாய் கேட்டு பின்னர் தமிழ் சினிமா என்பதால் 80 லட்சத்திற்கு ஓகே சொல்லியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் சன்னி லியோனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதற்கு முன்பு ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடி இருந்தது குறிப்பிடத்தக்கது.